இம்மாதம் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைப்பதற்கான 5 காரணங்கள் என்னென்ன?

இம்மாதம் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைப்பதற்கான 5 காரணங்கள் என்னென்ன?
சென்னை: மத்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது வட்டி விகிதங்களைக் கூட்டியும், குறைத்தும் வருகிறது. இந்த முடிவுகள் அப்போது இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார சூழல்களைப் பொறுத்தே எடுக்கப்படுகின்றன. அதேபோல மத்திய ரிசர்வ் வங்கி நாளை( 3ம் நிதி) கொள்கைகளை மறு ஆய்வு செய்வதற்காக கூடுகிறது. இந்த மறுஆய்வு கூட்டத்தில் வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது ஏன் என்று பார்ப்போம்.

பணவீக்கம் குறைந்து வருதல்

கடந்த 3 ஆண்டுகளிலேயே மிகவும் குறைந்த அளவாக 5.96 சதவீதம் மொத்த விலை விகிதம் (Wholesale Price Index) குறைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மிகவும் வேகமாக குறைக்காமல் இருக்க பணவீக்கமும் ஒரு காரணமாக உள்ளது. தற்பொழுது, பணவீக்கம குறைந்து வருவதால் ரிசர்வ் வங்கி குறைந்தபட்சம் 0.25 சதவீதம் வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

குறைந்த வளர்ச்சி விகிதம்

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைதுள்ளதால் டிசம்பர் 31, 2012-ல் முடிவடைந்த காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product) 4.5 சதவிகிதமாகவே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் காணப்பட்ட மிகவும் குறைந்தபட்ச வளர்ச்சி விகிதமாக இது உள்ளது. எனவே, வட்டி விகிதத்தை குறைப்பதன் வாயிலாக முதலீட்டினை அதிகரித்து வளர்ச்சியடையலாம் என்றும் சொல்லப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

இந்தியாவின் இறக்குமதியில் மிகவும் அதிகமாக இருப்பது கச்சா எண்ணெய் தான். தற்போது, கச்சா எண்ணெயின் விலை சந்தைகளில் குறைந்து வருவதால் அது இறக்குமதி மற்றும் பணவீக்கத்தை குறைக்கவும் உதவும்.

தங்கத்தின் விலை வீழ்ச்சி

தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக மொத்தமாக தங்கத்தின் இறக்குமதி குறையும். ஏனெனில் நாம் தங்கத்தை அதிகளவு இறக்குமதி செய்து வருகிறோம். தங்கத்தின் இறக்குமதி குறைவதால் அது நடப்பு கணக்கின் பற்றாக்குறை மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் மீதான அழுத்தம் ஆகியவற்றை சற்றே குறைக்கும். இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக இருக்கும் வேளைகளில் அது நமது இறக்குமதியை குறைத்துவிடும்.

முதலீட்டு சுழற்சிக்கு உயிரூட்டுதல்

அதிகமான வட்டி விகிதம் இருப்பது பல்வேறு நிறுவனங்கள் புதியதாக முதலீடு செய்வதற்கு அஞ்சும் சூழலையே ஏற்படுத்தி இருக்கின்றன. எனவே, வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலமாக நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்கும் அதே வேளையில், பொருளாதர வளர்ச்சி விகிதமும் அதிகரிக்கும். எனவே மத்திய ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்து முதலீடுகளை ஈர்க்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+