ஸ்பைஸ்ஜெட்டில் முதலீடு செய்த ஜுன்ஜுன்வாலா! பங்குகள் விலை விர்..விர்..!!

இந்தியாவின் கோடீஸ்வர முதலீட்டாளராக ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவும் அவரது மனைவியும் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஸ்பைஸ்ஜெட்டின் 25 லட்சம் பங்குகளை சுமார் ரூ10 கோடிக்கு வாங்கினர். ஒரு பங்கின் விலை ரூ38.94 என்ற அடிப்படையில் 25 லட்சம் பங்குகளை ராகேஷும் அவரது மனைவியும் வாங்கியுள்ளனர். ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ரேர் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ7.69 கோடிக்கு 25 லட்சம் ஸ்பைஸ்ஜெட் பங்குகளை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜுன்ஜுன்வாலாவின் அதிரடி முதலீட்டால் இன்று காலை ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 8% உயர்ந்திருந்தது. ஒரு பங்கின் விலை ரூ42.95 ஆக இருந்தது.


Click it and Unblock the Notifications