ரிலையன்ஸை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் மூன்றாவது மதிப்புமிக்க நிறுவனமான ஐடிசி

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL), பங்கு சந்தை முதலீடு அடிப்படையில் நாட்டின் முதல் மூன்று மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறியது.

(How can married ladies change name on the PAN card?)

முகேஷ் அம்பானி தலைமையிலான இந்நிறுவனம் ஐடிசி நிறுவனத்திடம் தன்னுடைய மூன்றாவது இடத்தை இழந்து நான்காம் இடத்திற்கு சென்றுள்ளது. இதன் மூலம், சந்தை முதலீடு அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று பெரிய நிறுவனங்களில் ஒன்று' என்கிற பெருமையை ரிலையன்ஸ் இழந்துள்ளது. தற்போது அந்த பெருமை ஐடிசி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

முதல் இரண்டு இடங்களை எந்தெந்த நிறுவனங்கள் பிடித்துள்ளன என்று பார்ப்போம்.

டிசிஎஸ் ஃபர்ஸ்ட், ஓஎன்ஜிசி செகண்ட்

டிசிஎஸ் ஃபர்ஸ்ட், ஓஎன்ஜிசி செகண்ட்

சந்தை முதலீடு அடிப்படையில் மிகவும் மதிப்புமிக்க முதல் 10 இந்திய நிறுவனங்கள் பட்டியலில் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனமான டிசிஎஸ் முதலிடத்திலும், இந்திய அரசின் எரி சக்திதுறை நிறுவனமான ஓஎன்ஜிசி 2வது இடத்திலும் உள்ளது. கடந்த வார இறுதியில் டிசிஎஸ்-ன் சந்தை முதலீடு ரூ. 277.680 கோடியாகவும், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சந்தை முதலீடு ரூ. 277.283 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ. 9.894 கோடி உயர்ந்து ரூ 2,77,680 கோடி அளவில் உள்ளது. அதே நேரத்தில், ஓஎன்ஜிசின் மதிப்பு ரூ. 9.325 கோடி உயர்ந்து ரூ. 2,61,353 கோடி அளவில் நிலை கொண்டுள்ளது.

3வது இடத்தில் ஐடிசி

3வது இடத்தில் ஐடிசி

கடந்த வார இறுதியில் ஐடிசியின் சந்தை மூலதனம் ரூ. 259.245 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ரூ. 261.353 கோடி மதிப்புடைய ஆர்ஐஎல் நிறுவனத்தை விட ரூ. 2.108 கோடி அதிகமாகும். எனவே, மதிப்புமிக்க முதல் 10 இந்திய நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸை நான்காவது இடத்திற்கு தள்ளிவிட்டு 3வது இடத்தை ஐடிசி நிறுவனம் பிடித்துள்ளது. சமீப காலங்களில் ஆர்ஐஎல் நிறுவனத்தின் வருவாய் தொடர்சியாக குறைந்தது வந்துள்ளது. அதுவே, ஆர்ஐஎல்-ன் தற்போதைய நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

முதல் 10ல் ஹெச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ்

முதல் 10ல் ஹெச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ்

சந்தை முதலீடு அடிப்படையில் மிகவும் மதிப்புமிக்க முதல் 10 இந்திய நிறுவனங்கள் பட்டியலில் சிஐஎல், ஹெச்டிஎப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இன்போசிஸ், ஹெச்டிஎப்சி மற்றும் என்டிபிசி ஆகியன இடம் பெற்றுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+