
எனவே கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகள், அந்த நிறுவனத்தின் சொத்துக்களை விற்க ஆரம்பித்தன. தற்போது அந்த நிறுவனத்தின் சொத்துக்களை விற்றதன் மூலம் ரூ.1000 கோடி கடனை அந்த வங்கிகள் திரும்பப் பெற்றுள்ளதாக இந்தியாவின் மிகப் பெரிய வங்கியாக இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தெரிவித்திருக்கிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் சேர்மன் பிரதிப் சௌவுத்ரி கூறுகையில்,
கொடுத்த கடனை மீண்டும் வசூலிப்பதற்காக கிங்ஃபிஷர் நிறுவனத்தின் சொத்துக்கள் விற்கப்பட்டு வருகின்றன. இன்னும் பெரிய கடன் தொகை வசூல் செய்யப்படாமல் இருக்கிறது.
இதுவரை இவ்வாறு சொத்துக்களை விற்றதன் மூலம் ரூ.800 முதல் ரூ.1000 கோடி பணத்தை வங்கிகள் திரும்பப் பெற்றுள்ளன. ஆனால் எஸ்பிஐ வங்கியால் வழிநடத்தப்படும் 17 வங்கிகள் ரூ.7000 கோடிக்கும் அதிகமான பணத்தை திரும்பப் பெறாமல் இருக்கின்றன. இந்த வங்கிகள் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் பங்குகளை ஏராளமாக வாங்கிக் குவித்திருந்தன.
இந்த பங்குகள் மூலம் அவை ரூ.500 கோடியை திரும்பப் பெறும். மேலும் கொடுத்த கடனை திரும்பப் பெறுவதற்காக கிங்ஃபிஷர் நிறுவனத்தின் சொத்துக்களை முழுவீச்சில் விற்று வருவகிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications