
5ல் 3 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்களை விற்பதற்காக அதிகப்படியான தள்ளுபடியையும் மற்றும் பணத்தைத் திருப்பித் தரும் திட்டங்களையும் களமிறக்குகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அரசிடமிருந்து ஒப்புதல் ஆணை பெறுவதற்கு முன்பே ஒரு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்களை வாங்க முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு அதிகப்படியான தள்ளுபடியை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கின்றன.
அதுபோல் மாதம் தோறும் ஒரு குறிப்பட்ட தொகையை வழங்கும் ரியல் எஸ்டேட் திட்டத்தில் சேருபவர்களுக்கும் அவர்கள் வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர். எனினும் அதற்காக தங்கள் சொத்துக்களை வாடகைக்கு விடுகின்றனர் அல்லது குத்தகைக்கு விடுகின்றனர்.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களில் முதலீடு செய்வது வாடிக்கையாளர்களுக்கு லாபகரமான சொத்தை தரும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் அவ்வாறு திட்டங்களில் சேருவதற்கு முன்பாக அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் நம்பகத்தன்மை கொண்டதா என்றும், அவர்கள் வழங்கும் அனைத்து பயன்களையும் தீர ஆராய்ந்து சேர்வது நல்லது. குறிப்பாக ரியல் எஸ்டேட் அஷ்யூர்டு ரிட்டர்ன் திட்டத்தில் சேர்பவர்களுக்கு 10 முதல் 12 சதவீத வட்டி வழங்குகின்றன.
உதாரணமாக, நீங்கள் நவி மும்பையில் ஒரு சதுர அடி ரூ.10,000 என்ற கணக்கில் 1000 சதுர அடி கொண்ட ஒரு கட்டிடத்தை ரூ.1 கோடிக்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த கட்டிடம் முழுமையாக உங்கள் வசம் வருவதற்கு முன்பாக, ரியல் எஸ்டேட் நிறுவனம் 10 சதவீத வட்டியை வழங்குவதாக உறுதியளித்திருக்கிறது என்றால் அந்த நிறுவனம் உங்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications