அனுமதி கிடைச்சாச்சு: இந்தியாவுக்கு வருகிறது கத்தார் தேசிய வங்கி

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

அனுமதி கிடைச்சாச்சு: இந்தியாவுக்கு வருகிறது கத்தார் தேசிய வங்கி
சென்னை: க்யூஎன்பி(இந்தியா) பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இந்தியாவில் துணை வங்கி அமைப்பதற்கு தேவையான அனைத்து ஒழுங்குமுறை அனுமதிகளும் கிடைத்துவிட்டதாக கத்தார் தேசிய வங்கி அறிவித்துள்ளது. 2013ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கிப் பணிகள் துவங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியாவில் முதலீடு மற்றும் நிதியுதவித் துறைகளில் தொழில் துவங்க உள்ள மத்திய கிழக்கு நாடுகளின் நிறுவனங்களுக்கு துவங்கப்படவுள்ள க்யூஎன்பி(இந்தியா) ஆலோசனைகளை வழங்க உள்ளதாகவும் அவ்வங்கி தெரிவித்துள்ளது.

தனது சர்வதேச விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக க்யூஎன்பி குழு, சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள தொழில் சந்தைகளில் நுழைவதில் ஆர்வமாக இருக்கிறது.

உலக அளவில் உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியின்படி (ஜிடிபி) இந்தியா பத்தாவது இடத்திலும், வாங்கும் திறன் சமநிலையின்படி (பிபிபி) மூன்றாவது இடத்திலும் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

1964ல் துவங்கப்பட்ட க்யூஎன்பி குழு கத்தாருக்கு சொந்தமான முதல் வியாபார வங்கி ஆகும். வங்கியின் உரிமை கத்தார் முதலீட்டு கழகத்திற்கு 50 சதவீதம் என்றும், தனியாருக்கு 50 சதவீதம் என்றும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Qatar National Bank Group gets nod for India subsidiary | அனுமதி கிடைச்சாச்சு: இந்தியாவுக்கு வருகிறது கத்தார் தேசிய வங்கி

The Qatar National Bank (QNB) Group has announced that it has received all regulatory approvals to establish a fully owned subsidiary under the name of QNB (India) Private Limited, which is expected to commence its operations during the 3rd quarter of 2013.
Story first published: Tuesday, May 21, 2013, 16:36 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns