ஏர்டெல், வோடபோன், ஐடியாவிற்கு எதிராக புதிய நோட்டீஸ் தயாரிக்கும் தொலைத் தொடர்புத்துறை

3ஜி அலைவரிசை சேவையை வழங்குவதில் விதிமுறைகளை மீறியதற்காக ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலர் போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு எதிரான நோட்டீஸை தொலைத் தொடர்புத்துறை தயாரித்து வருகிறது.

தொலைத் தொடர்புத்துறை தயாரித்து வரும் நோட்டீஸ், மேற்சொன்ன நிறுவனங்களின் பின்வரும் குற்றங்களை சுட்டிக் காட்டுகிறது. அதாவது தொலைத் தொடர்பு சேவையை வழங்க அரசு உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தொலைத் தொடர்பு சேவைக்கான யுஎஸ் உரிமத்தின் 3ஜி ஐசிஆர் விதிமுறைகளை மீறி 3ஜி ஸ்பெக்ட்ரத்தைப் பயன்படுத்தி இருக்கின்றன என்பதாகும். இதை தொலைத் தொடர்புத்துறையின் நம்பத் தகுந்த தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இதற்கு முன்பு, ஐடியா செல்லுலர், வோடாபோன் மற்றும் பாரதி நிறுவனங்களின் யுஎஸ் உரிமத்துக்காக தயாரிக்கப்பட்டது. குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில பகுதிகளில் 3ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை வழங்க வோடாபோன் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த சேவையை வழங்குவதில் வோடாபோன் நிறுவனம் விதிமுறைகளை மீறிவிட்டது. அதனால் அந்த நிறுவனத்திற்கு எதிரான நோட்டீஸை மிகத் தீவிரமாக தொலைத் தொடர்புத்துறை தயாரித்து வருகிறது.

மேலும் டெல்லி,சென்னை, கிழக்கு உத்திரபிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கொல்கொத்தா போன்ற பகுதிகளிலும் 3ஜி சேவையை வழங்குவதில் வோடாபோன் அரசு விதிமுறைகளை மீறியிருக்கிறது. விரைவில் தொலைத் தொடர்புத்துறை வோடாபோன் நிறுவனத்திற்கு நோட்டீஸை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அதுபோல் அஸ்ஸாம், பீகார், கர்நாடகா, மும்பை, மேற்கு வங்காளம் மற்றும் மேற்கு உத்திரபிரதேசம் போன்ற பகுதிகளில் 3ஜி சேவையை வழங்குவதில் பார்தி ஏர்டெல் நிறுவனம் அரசு விதிகளை மீறியிருக்கிறது. அதோடு ராஜஸ்தானில் 3ஜி சேவையை இணைந்து வழங்கிய பார்தி ஏர்டெல் உடைய துணை நிறுவனமான பார்தி ஹெக்சகாம் மற்றும் டிசிஐஎல் ஆகிய நிறுவனங்கள் விதிமுறைகளை மீறியுள்ளன.

3ஜி இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் ஒப்பந்தத்தை மீறியதற்காக, பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலர் மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்களுக்கு டேக்கர் என்ற நோட்டீஸை டாட் ஏற்கனவே அனுப்பி இருக்கிறது. ஏர்வேவ்ஸ் வசிதி இல்லாமல் தனது வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சேவையை வழங்கியதற்காக இந்த டேக்கர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு மேற்சொன்ன தொலைத் தொடர்பு நிறுவனங்கள் என்ன பதிலளிக்கப் போக்கின்றன என்பது போகப் போகத் தெரியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+