கட்டணத்தை உயர்த்த இருக்கும் கோஏர்(GoAir)

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

சிறந்த விமான சேவையை செய்து வரும் கோஏர் விமான நிறுவனம், தங்களது லாபத்தை அதிகரிப்பதற்காகவும், சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காவும் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. அதன்படி ஜன்னல் ஓர இருக்கைகள் மற்றும் அளவுக்கு அதிகமான லக்கேஜுகளை கொண்டு வரும் பயணிகளிடமும் அதிகமான கட்டணத்தை வசூலிக்கத் திட்டமிட்டிருக்கிறது.

(Cibil marketplace: Why you need to visit it before taking a loan?)

குறிப்பாக வரும் காலங்களில் கோஏர் விமானங்களில், ஜன்னல் ஓரம் மற்றும் நடைபாதை பக்க இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்ய விரும்புவோருக்கு சாதாரண கட்டணத்தைவிட ரூ.200 அதிகமாக வசூலிக்கப்படும். அதுபோல் 3, 12 மற்றும் 13 ஆகிய வரிசைகளில் இருக்கும் இருக்கைகளுக்கு லெக்ரூமுடன்(legroom) முன்பதிவு செய்பவர்களிடமிருந்து சாதாரண கட்டணத்தைவிட அதிகமாக ரூ.500 வசூல் செய்யப்படும்.

கோஏர் விமான நிறுவனம், 3 வகையான இலவச லக்கேஜ் திட்டங்களை வைத்திருக்கிறது. அதாவது 3, 5 மற்றும் 10 கிலோ திட்டங்கள் ஆகும். 3 கிலோ லக்கேஜ் திட்டத்தை எடுத்த ஒரு பயணி 20 கிலோ அளவிற்கு லக்கேஜ்யை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், அதிகமாக ரூ.300 செலுத்த வேண்டும். அதுபோல் 5 கிலோ திட்டத்தை எடுத்தவர் அதிகமான ரூ.900மும்,10 கிலோ திட்டத்தை எடுத்தவர் அதிகமான ரூ.1,800ம் செலுத்த வேண்டும்.

கோஏரின் இந்த கட்டண உயர்வு திட்டம், இந்த விமானப் போக்குவரத்து துறை அனுமதி அளித்தவுடன் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: profit, லாபம், tax
English summary

Excess baggage and seat choosing to cost extra on GoAir | கட்டணத்தை உயர்த்த இருக்கும் கோஏர்(GoAir)

Hoping to improve its margins and operational efficiency, GoAir has decided to charge additional fees for carrying excess baggage and for having the desire to take window seat.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns