
இது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனத்தின் பத்திரிக்கைத் தொடர்பாளர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், "எங்களது ஊழியர்கள், தங்களது சம்பளத்தில் உறுதியற்ற நிலை இருக்கிறது என்றும், சம்பளத்தில் வேறுபாடுகள் அதிகம் இருக்கிறது என்றும் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். அவர்களின் கூற்றைக் கவனத்தில் கொண்டு இந்த குறைபாடுகளை எளிமையான சம்பள விதிமுறையை அமல்படுத்த இருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வை இன்னும் இன்போசிஸ் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் எஸ்டி சிபுலால் இந்த புதிய சம்பள விதிமுறையைப் பற்றி அறிவித்திருக்கிறார்.
மேலும் அவர் கூறும் போது "உழியர்களுக்கு சம்பளம் வழங்கும் போது நாங்கள் எப்போதுமே புதுமைகளைப் புகுத்துவோம். கடந்த வருடம் பொருளாதார நிலை மிகவும் மந்தமாக இருந்தாலும், எங்கள் ஊழியர்களுக்கு கணிசமான அளவில் சம்பள உயர்வு அளித்தோம். புதிய சம்பள விதிமுறை, சம்பளத்தில் உள்ள வேறுபாடு மற்றும் உறுதியற்ற தன்மை போன்றவற்றைக் களையும் சரி செய்யும்" என்று தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications