வரி கட்டாதவர்களுக்கு நிதித் துறையின் பாசக் கடிதம்

இந்த கடிதங்கள் அவர்களிடம் நேரடியாகவோ அல்லது அவர்கள் வைத்திருக்கும் நிறுவனங்களுக்கோ அனுப்பப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெரிய அளவில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கும், பொருளாதார புலனாய்வுத் துறையால் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்களுக்கும் இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் கணிசமான அளவில் வரியை வசூலித்துவிடலாம் என்று இந்திய நிதித்துறை திட்டமிட்டிருக்கிறது.
இந்த திட்டத்திற்கு டைரக்டரேட் ஆஃப் சென்ட்ரல் எக்சைஸ் இன்டெலிஜன்ஸ் (DGCEI) மற்றும் டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் ரெவனியு இன்டெலிஜன்ஸ் (DGRI) போன்றவையும் தலைமை வகித்திருக்கின்றன. இந்த இரண்டு அமைப்பு, பொருளாதார புலானாய்வுத் துறையுன் இணைந்து இந்த பணியைச் செய்ய இருக்கின்றன.


Click it and Unblock the Notifications