ஐபிஎல் குழப்பம் எப்படி இந்தியா சிமெண்ட்ஸ் பங்குதாரர்களை பாதித்தது?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐபிஎல்ஐ சுற்றியுள்ள சூதாட்டக் குழப்பம் மற்றும் அதனுடைய எதிர்மறையான விமர்சனங்கள் ஊடக உலகத்தில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலவரத்தில் ஒரு பகுதி முதலீட்டாளர்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளனர். அவர்கள் வேறு யாரும் அல்ல. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸின் முதலீட்டாளர்களே அத்தகைய கடும் இழப்பை சந்தித்தவர்கள்

 

(Health Insurance for Senior Citizens)

 

மே 30 அன்று, இந்தியா சிமெண்ட்ஸின் பங்கு ரூ 67.60 என்கிற அளவில் வர்த்தகமாயிற்று. இது இந்த நிறுவனத்தின் கடந்த 52 வார வரலாற்றில் மிகக் குறைந்த விலையாகும். ரூ 90 க்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டிருந்த இந்த பங்கு, 6 வர்த்தக அமர்வு இடைவெளியில் கடும் சரிவை சந்தித்து ரூ 67 ஆக குறைந்தது. இந்த சரிவு இந்தியா சிமிண்ட்ஸின் நிர்வக இயக்குனரான திரு சீனிவாசனின் மருமகன் திரு குருநாத் மையப்பன் ஐபிஎல் ன் சூதாட்ட புகாரில் சிக்கி சிறை சென்றதால் ஏற்பட்ட பாதிப்பாக கருதப்படுகிறது.

ஐபிஎல் பந்தய சூதாட்டா சர்ச்சைகளுக்கு முன்பிருந்தே இந்தியா சிமெண்ட்ஸ் முதலீட்டாளர்கள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார்கள். Firstpost.com என்கிற இணையதளத்தின் அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், சென்செக்ஸ் சுமார் 14.47 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியா சிமெண்ட்ஸின் பங்குகள் 53.33 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன.

இதில் கவலை தரும் அம்சம் என்னவெனில், பிசினஸ் ஸ்டாண்டர்ட் அமைப்பு, துணை நிறுவனங்களின் முன்னேற்றங்கள் பற்றிய தனது அறிக்கையில் இந்நிறுவனத்தை பற்றி கூறியிருப்பதாகும். "உயர் மேலாண்மை கவனம் மற்றும் நோக்கம் இல்லாமல் இருக்கிறது. மேலும் இந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஒரு சறுக்கல் இருப்பது போல தோன்றுகிறது, இங்கு மூலதனம் சரியாக பிரித்தளிக்கப்படவில்லை. மேலும், சரியான திட்டங்க்ளுக்கு சரியான நேரத்தில் முதலீடு கிடைப்பதில்லை" என பிசினஸ் ஸ்டாண்டர்ட் அமைப்பின் சிமெண்ட் ஆய்வாளர் கூறியுள்ளார். அவர் மேலும் பட்டியலிடப்படாத துணை நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட மூலதனத்தை செய்தித்தாள்களுக்கு சுட்டிக்காட்டினார். இறுதியாக இந்த நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டாளி நிறுவனங்களுக்கு ரூ 2,372கோடி கடன் இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் கடன் தொகை இரண்டு மடங்காக பெருகி உள்ளது.

ஆனால் பங்குதாரர்களுக்கு சிறிய அவகாசம் உள்ளது. அம்பரீஷ் பாலிகா, நிர்வாக பங்குதாரர், குலோபல் வெல்த், எடில்விஸ் கேப்பிடல், கூறியதை பிசினஸ் ஸ்டாண்டர்ட் மேற்கோள் காட்டியிருந்தது. அதில் "இந்தியா சிமெண்ட்ஸ் கடந்த நான்கு ஆண்டுகளில் மிக அரிதாகத்தான் பங்குதாரர்களுக்கு உரிய மதிப்பை வழங்கியுள்ளது. மேலும், தற்போதைய சர்ச்சையான சூழ்நிலையில் அது எங்கும் செல்ல போவதில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்குதாரர்களுக்கு கெட்ட நேரம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How the IPL fiaso has made India Cements shareholders poorer?

In all of the IPL betting melee and cacophony surrounding it, one set of investors who have lost are the shareholders of India Cements, the company that owns the Chennai Super kings.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X