
( IPL row: India Cements shareholders are the ultimate losers)
இது தொடர்பார ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை திறம்பட எளிய முறையில் செயல்படுத்த, வங்கிகளே இல்லாத கிராமப்புறங்களில் வங்கிக் கிளைகளை விரிவாக்கம் செய்வது அவசியம். வங்கிகளின் விரிவாக்கத்திற்கு முன்னுரிமை அளித்து, 2013-2016 அடங்கிய மூன்றாண்டிற்கான வரைவு திட்டத்தை தயார் செய்து வைப்பது அவசியம்.
இவ்வாறு, வங்கிச் சேவைகள் இல்லாத கிராமப்புறங்களில் வங்கிகளை விரிவாக்கம் செய்ய சிறப்பு கடன் சலுகைகள் வழங்கப்படும். வருடாந்திர வங்கி விரிவாக்க வரைவுத் திட்டத்திலிருந்து கூடுதலாக 25% நிதி வழங்கப்படும்.
இவ்வாறு கிராமப்புறங்களில் வங்கிகளின் கிளைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
அரசின் நேரடி மானியத் திட்டம் என்பது ஆதார் அட்டையுடன் இணைப்பிலுள்ள வங்கிக் கணக்கில் மானியத்தை நேரடியாக அரசு செலுத்துவதாகும். ஆகையால், நாட்டில் பல்வேறு இடங்களில் இருக்கும் மக்கள், வங்கிச் சேவைப் பெற முடிந்தால் தான், இத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த முடியும். இதன் விளைவாகவே ரிசர்வ் வங்கி இந்த அறிக்கையை விடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications