
பேலன்ஸ்டு ஃபண்ட்டின்(கலப்பின நிதியின் இரண்டாவது வகை) , எம்.ஐ.பீ நிதிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த நிதியில் பங்கு சந்தையின் முதலீடு அதிகமாக இருக்கும். ஏனெனில் இது அதிக வருமானத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிதியாகும். மேலும் இந்த நிதியில் கடன் சார்ந்த முதலீடு எம்.ஐ.பீ திட்டத்தை விட குறைவாக இருக்கும். இந்த நிதியில் சுமார் 25 முதல் 35 வரை கடன் சார்ந்த முதலீடாகவும், 75 முதல் 65 சதவீதம் வரை பங்குச் சந்தை முதலீடாகவும் இருக்கும்.
இந்த நிதியின் அபாய அளவு பங்குச் சந்தை நிதியை ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவு. ஏனெனில் பங்குச் சந்தை நிதிகளில், மொத்த முதலீட்டில் 90 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது. முதலீடுகளின் நிலையற்ற தன்மையையும், அபாயத்தையும் தவிர்க்க விரும்பும் முதலீட்டாளர்கள் இத்தகைய நிதிகளில் முதலீடு செய்யலாம். மேலும் பேலன்ஸ்டு ஃபண்ட்களின் வரி சலுகைகள் வருமான திட்டங்களை விட அதிகமாக இருக்கும். மேலும் எம்.ஐ.பீ விஷயத்தில் விதிக்கப்படும் ஈவுத்தொகை விநியோக வரி என்பது பேலன்ஸ்டு ஃபண்ட்டில் கிடையாது. இதேபோல், நீண்ட கால மூலதன ஆதாய வரியும் கிடையாது. ஆனால் இந்த நிதிகளுக்கு 0.001 சதவீத பங்கு பத்திர பரிவர்த்தனை வரி (STT) விதிக்கப் படுகிறது. பேலன்ஸ்டு ஃபண்ட் என்பது ஒரு முதலீட்டாளருக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. ஏனெனில் இது பங்கு சார்ந்த நிதி மற்றும் கடன் சார்ந்த நிதிகளின் நன்மைகளை ஒருசேர முதலீட்டாளர்களுக்கு தருகிறது. எனவே ஒரு முதலீட்டாளர் இரண்டு நிதிகளில் தனிதனியாக முதலீடு செய்வதற்கு பதிலாக ஒரே திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஆகவே முதலீட்டாளர்களுக்கு பேலன்ஸ்டு ஃபண்ட் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
எந்த ஒரு சந்தர்பத்திலும் எம்.ஐ.பீ மற்றும் பேலன்ஸ்டு ஃபண்ட் போன்றவற்றை ஒரு மாற்றாக உபயோக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வரி விதிப்பு பொருத்த வரை இந்த இரு நிதிகளின் இயங்கு தளங்களும் அவற்றின் தாக்கங்களும் வெவ்வேறானவை. மேலும் இந்த நிதிகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நோக்கங்களும் வெவ்வேறானவை. எனவே, முதலீட்டை திரும்பப் பெறும் விஷயத்தை பொறுத்து இந்த நிதிகளை தேர்வு செய்யலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications