
"வளர்ச்சி விகிதம் கணிசமாக உள்ளது, பணவீக்கம் அதன் உச்ச பட்ச அளவில் இல்லை எனினும், பல ஆபத்து காரணிகள் உள்ளன. கட்டண சமநிலை ஒரு வித அழுத்தத்தில் உள்ளது. முதலீடுகள் இன்னும் வேகம் எடுக்க வேண்டும்" என இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கூறினார்.
"சில்லறை பணவீக்கம் பொருத்த வரையில் இன்னும் அதிகமக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்த அளவிற்கு பணவீக்க விகிதம் குறையவில்லை" என்றும் சுப்பாராவ் தெரிவித்தார்.
"உலகளாவிய பொருட்களின் விலைகள் பற்றி குறிப்பிடும் பொழுது, கடந்த சில மாதங்களில் விலை சற்றே தணிந்துள்ளது. ஆனாலும் நாம் தணிந்திருக்கும் விலையை உண்மையான விலையாக எடுத்துக் கொள்ள முடியாது" என்று கூறினார்.
"பிற நாடுகளின் பொருளாதார நிலையுடன் ஒப்பிடும் பொழுது ரூபாய் மதிப்பு மிகவும் குறைந்துவிட்டது, அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்திய பொருளாதாரத்திற்கு மிக பெரிய ஆபத்து காரணி," என்றும், 2012-13ம் ஆண்டுக்கான நடப்பு கணக்கு பற்றாக்குறை சுமார் 5 சதவீத அளவிற்கு இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications