ஏப்ரலில் மந்தமடைந்த இந்திய உற்பத்தித் துறை

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏப்ரலில் மந்தமடைந்த இந்திய உற்பத்தித் துறை
கடந்த மே மாதம் இந்தியாவின் உற்பத்திப் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உற்பத்தி, புதிய ஆர்டர்கள், வேலை வாய்ப்புகள், பொருள்களை நுகர்வோருக்கு வழங்குபவர்களின் வழங்கும் காலம் மற்றும் பொருள்களின் இருப்பு ஆகியவை, 50 மாதங்களுக்குப் பிறகு 51.0 புள்ளியிலிருந்து 50.1 புள்ளிக்குச் சரிந்திருப்பதாக எச்எஸ்பிசியின் பர்ச்சேஸிங் மேனேஜரின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மார்ச் 2009க்குப் பிறகு இந்த பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதாக அந்த புள்ளி விவரம் தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில் உற்பத்தி அளவு சிறிதுதான் சரிந்திருக்கிறது. மேலும் ஆர்டர்கள் தொடர்ந்து 5 மாதங்களாக உயர்ந்து இருக்கின்றன என்றும் அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆனால் உற்பத்தித் துறையில் விரிவாக்கம் மிகவும் மந்தமாகவும் மற்றும் வேகம் குறைவாகவும் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.

 

இந்த சரிவுக்கு முக்கிய காரணம் இந்தியாவில் தற்போது நிலவும் புதிய வேலைக்கான போட்டி மற்றும் கடுமையான சந்தை நிலவரம் போன்றவையாகும். அனால் அதே நேரத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த புதிய ஆர்டர்கள் கடந்த மே மாதம் கணிசமாக இருந்தது என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதோடு கடந்த ஜனவரியில் இருந்து ஏற்றுமதித் துறையும் ஏறுமுகத்தில் இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

 

மின்வெட்டுகள் மற்றும் பணியாளர்களின் போராட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக கடந்த மே மாதம் உற்பத்தி துறையில் டெலிவரி காலம் அதிகமானது.

இந்திய உற்பத்தி பிஎம்ஐ சர்வேயைப் பற்றி, இந்திய ஆசியாவின் தலைமை பொருளாதார நிபுணரான லீப் எஸ்கெசன் எச்எஸ்பிசியில் கூறும் போது, கடந்த மே மாதம் உற்பத்தித் துறையில் நடவடிக்கைகள் மந்தமானதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் ஏற்பட்ட குறைவான ஆர்டர்களாகும். மேலும் அதிகமான மின்வெட்டுகள் இருந்ததால், உரிய நேரத்தில் பொருள்களை உற்பத்தி செய்ய முடியாமல் புதிய ஆர்டர்களை எடுக்க முடியவில்லை. பணவீக்கம் மற்றும் உற்பத்தி பொருள்களின் விலை அதிகரிப்பும் இந்த மந்தத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் இந்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தில், இந்த குறைகள் எல்லாம் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian manufacturing activity slows in April: HSBC PMI

Operating conditions in the Indian manufacturing economy stagnated during May. The seasonally adjusted HSBC Purchasing Managers' Index - an indicator derived from individual diffusion indices measuring changes in output, new orders, employment, suppliers' delivery times and stocks of purchases - fell from 51.0 in April to 50.1 and was at a 50-month low.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X