தொலைத் தொடர்பு துறைக்கு குமார் மங்களம் பிர்லா புகார் கடிதம்

தொலைத் தொடர்பு துறைக்கு குமார் மங்களம் பிர்லா புகார் கடிதம்
தாங்கள் நடத்தும் ஐடியா செல்லுலர் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு உரிமம் வழங்குவதில் காலம் தாழ்த்துவதற்காக தொலைத் தொடர்புத்துறைக்கு, ஆதித்தியா பிர்லா குழுமத்தின் சேர்மன் குமார்மங்கலம் பிர்லா ஒரு புகார் கடித்தை அனுப்பி இருக்கிறார்.

(Real Estate Bill likely to make homes costlier)

பிர்லா கூறும் போது, நவம்பர் 2012ல் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தை ஐடியா நிறவனம் வாங்கியது. ஆனால் அதற்கான உரிமம் இன்னும் ஐடியாவிற்கு வழங்கப்படாததால், ஐடியா மீது முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குபவர்களின் நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் 3வது மிகப் பெரியத் தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஐடியா, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு செய்தததற்காக உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவின் 7 பகுதிகளில் தங்களது தொலைத் தொடர்பு சேவையை வழங்க ரூ.2,031 கோடி செலுத்தி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் எடுத்திருக்கிறது.

மேலும் பிர்லா கூறும் போது 3ஜி இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ஐசிஆர்) பிரச்சினையைத் தாங்கள் தனியாக கையாண்டதாகத் தெரிவித்திருக்கிறார். டாட்டுக்கு எழுதிய கடிதத்தில், 3ஜி ஐசிஆர் சம்பந்தமான 6வது பிரிவின் லெட்டர் ஆப் இன்டன்ட் (எல்ஒஐ) தனியாகக் கையாளுமாறு டாட்டை கோரியிருக்கிறார்.

அதோடு ஐடியா அதிகமான முதலீட்டைச் செய்திருப்பதால், அந்த நிறுவனத்தின் பஞ்சாப் பகுதிக்கான 3ஜி சேவைக்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறும் டட்டை, அந்த கடிதம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+