மீண்டும் நாராயண மூர்த்தி: எதிர்கால செயல்திறனை பற்றி கடந்த கால வரலாற்றில் ஒரு அறிகுறியும் இல்லையே

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீண்டும் நாராயண மூர்த்தி: கடந்த கால வரலாற்றில் ஒரு அறிகுறியும் இல்லையே
நீண்ட காலமாக, இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையின் முகமாக இருந்து வந்திருக்கிறது. அந்த நிறுவனப் பங்குள் முதலீட்டாளர்களின் விருப்பதிற்குரியதாகவே இருந்து வருகிறது. இந்திய பங்கு ஆய்வாளர்கள், வெளிநாட்டு நிதிகள் உட்பட அனைவரும் இன்போசிஸ் நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதை ஒரு அன்றாடக் கடமை போல் பின்பற்றி வருகின்றனர். இந் நிறுவனத்தை தகவல் தொழில் நுட்பத் துறையின் போக்கை தீர்மானிக்கும் ஒரு முக்கிய நிறுவனமாக கருதினர். அதாவது இந்நிறுவனமே இத்துறையில் புதிய முயற்சிகள் மற்றும் மாற்றங்களை முன்னெடுக்கும் முக்கியமானா நிறுவனமாகக் கருதப்பட்டது.

(Real Estate Bill likely to make homes costlier)

 

நாம் மெரியம் வெப்ஸ்டரின் வரையறையை பின்பற்றினால், இனி இன்ஃபோசிஸ் நிறுவனம் ஐ.டி நிறுவனங்களின் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய நிறுவனமாக கருத முடியாது. நாஸ்காமின் தொழில் துறை பற்றிய மதிப்பீடுகளில் இருந்து இன்ஃபோசிஸ் நிறுவனம் பெருமளவு விலகிச் சென்று விட்டது. எனவே இதை நாம் தகவல் தொழில் நுட்ப துறையின் முண்ணனி நிறுவனமாக கருதமுடியாது. நாஸ்டாக்கின் பட்டியலின் படி காக்னிசண்ட் நிறுவனம் வருவாய் அடிப்படையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக இடம் பெற்று விட்டது. எச்சிஎல் டெக் நிறுவனத்தின் வளர்ச்சி வேகம் தொழில் துறை வல்லுனர்களை திகைத்து போகச் செய்து விட்டது. மேலும் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி திகைக்கவைப்பதால், இதுவே தகவல் தொழில் நுட்பத் துறையின் முண்ணனி நிறுவனமாக உள்ளது.

 

2008ம் ஆண்டு பங்குச் சந்தை சூறாவளியை சமாளித்த இன்ஃபோஸிஸ் நிறுவனப் பங்குகள், அதன் சமீபத்திய காலாண்டு அறிக்கைக்கு பின் சுமார் 20 சதவீதம் வீழ்ச்சி கண்டு முதலீட்டாளர்களை பயமுறுத்துகிறது. உண்மையில், எந்த ஒரு பங்க்கும் அதன் காலாண்டு கணக்குகளை அறிவித்த அன்றே சுமார் 20 சதவீதம் வீழ்ச்சியடைந்ததில்லை.

இன்ஃபோசிஸ்யின் இந்த நிலைமைக்கு காரணம்?:

தொழில் நிபுணர்கள், இன்ஃபோசிஸ் எப்பொழுதுமே ஆபத்தை எதிர் கொள்ள தயங்கி வந்துள்ளது எனத் தெரிவிக்கின்றனர். அதுவே இந்நிறுவனத்தின் தற்போதைய நிலைக்கு காரணம் எனவும் தெரிவிக்கின்றனர். மேலும் இந்நிறுவனம் ஏராளமான பணத்தை கையிருப்பாக வைத்திருந்தும் புதிய நிறுவனங்களை கையகப்படுத்துவதில் தயக்கம் காட்டி வந்திருக்கிறது எனவும் தெரிவித்தனர்.

இது சமீபத்திய லோடுஸ்டொன் நிறுவனத்தின் கையகப்படுத்தலுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கின்றனர். அவ்வாறு புதிய நிறுவனங்களை கையகப்படுத்து இந்த நிறுவனம் மேலும் வளர உதவும். மேலும் இந்த நிறுவனத்தின் பணம் வருவாய் மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். இதனுடைய பழமைவாத அணுகுமுறையினால் டிசிஎஸ், காக்னிசன்ட் மற்றும் எச்சிஎல் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட வலிமை தரவில்லை. இந்நிறுவனம் தன்னுடைய லாப சதவீத்தில் சமரசம் செய்து கொள்ளத் தயாரில்லை. அதிக அளவு வியாபாரம் தரும் நிறுவங்களுடன் லாப சதவீதத்தை குறைத்து வணிகம் செய்ய டிசிஎஸ், காக்னிசன்ட் மற்றும் எச்சிஎல் போன்ற நிறுவனங்கள் தயராக இருக்கின்றன.

"நான் ஒன்றை உறுதியாக கூறுவேன், இந்த நிறுவனத்தின் இத்தகைய செயல்பாட்டிற்கு இதன் நெறிமுறைகளே முக்கிய காரணம். இந்த நிறுவனம் இதன் லாப விளிம்புகளை விட்டுக்கொடுக்க என்றுமே தயாராக இல்லை. இது இந்த நிறுவனத்தின் நெறிமுறைகளில் ஆழமாக வேறுன்றியுள்ளது. நான் இந்த வியாபார மாதிரிக்கு உடன்படுகின்றேன்" என இந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்த சசி சேகர், இன்போசிஸ்ஸின் முன்னாள் பணியாளர் கூறுகிறார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. "அவர்கள் மேலிருந்து கீழாக நிறுவனத்தை நிர்வாக வசதிக்காக பிரித்து வைத்துள்ளனர். ஆனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களுக்கு அதிகாரத்தை வழங்கவில்லை. இது நிர்வாக அனுகுமுறையில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இதன் சக போட்டி நிறுவனங்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்கள் விரைந்து முடிவெடுக்கின்றனர்" என சேகர் கூறுகிறார்.

மூர்த்தியால் வளர்ச்சி எண்களை புதுப்பிக்க முடியுமா?:

மூர்த்தியால் இந்நிறுவனத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்பது மிகவும் சந்தேகத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. மூர்த்தியின் ஒய்வுக்குப் பின் உலக சூழல் நிறையவே மாறிவிட்டது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் உலக பொருளாதார சூழலை சார்ந்தது. மேலும் அமெரிக்க சந்தையின் நிலைமைகள் மிக மோசமாக உள்ளது, ஐரோப்பாவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. மேலும் அமெரிக்க கடுமையான குடிவரவு விதிகள் மென்பொருள் தொழில் விசாக்களை கடுமையாக பாதிக்கிறது. மூர்த்தியுடன் வேலையில் இருந்த உயர்மட்ட ஊழியர்கள் இந்நிறுவனத்தை விட்டு விலகிச் சென்றுவிட்டனர். ஒப்பீட்டளவில் பழமைவாத மூர்த்தியால் இன்றைய மாறி வரும் நிலையை சமாளிக்க முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

"தற்போது மன உறுதி குறைவாக உள்ள நிலையில் நாராயண மூர்த்தி ஒரு பெரிய உந்துசக்தியாக இருந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களின் மன உறுதியை அதிகரிக்கச் செய்ய முடியும். அவ்வாறு நடந்தால் இன்ஃபோசிஸ் மீண்டும் பழைய பாதைக்கு திரும்பி விடும். நான் குறுகிய காலத்தில் இந்நிறுவனத்தின் வணிக தந்திரங்களில் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் பார்க்கவில்லை", எனவும் சேகர் கூறுகிறார்.

"நம்முடைய பார்வையில் இந்நிறுவனத்தின் பொருளீட்டும் திறமை தப்பொழுது உள்ள சூழ்நிலையில் மிகச் சுமாராகவே இருக்கும். ஏனெனில் இது மிதமான வளர்ச்சி/வருவாய் விகிதத்தை எதிர்கொண்டுள்ளது" என கோல்ட்மேன் சேச்சஸ் நிறுவனம் மூர்த்தியின் நியமனத்திற்கு பின்னர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனவே தெளிவாக, இது எதிர்கால செயல்திறனை பற்றி கடந்த கால வரலாற்றில் ஒரு அறிகுறியும் தென்படாத ஒரு நிகழ்வாக இருக்கப் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Murthy's return at Infy:Past track record no indication of future performance

For long, Infosys was described as a bellwether stock by almost every equity analyst, including those from foreign funds. According to the Merriam Webster, bellwether is defined as: "one that takes the lead or initiative".
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X