கார்ப்பரேட் நிறுவனங்களின் உயரதிகாரிகளின் சம்பளத்தை ஆராயும் வருமானவரித் துறை

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார்ப்பரேட் நிறுவனங்களின் உயரதிகாரிகளின் சம்பளத்தை ஆராயும் வருமானவரித் துறை
வருமானவரி துறை இந்தியாவின் முன்னனி கார்ப்பரேட் மற்றும் பிஎஸ்யு நிறுவனங்களில் பணிபுரியும் மேலதிகாரிகளின் சம்பள அமைப்பை பரிசோதனை செய்ய முடிவெடுத்திருக்கிறது. அதன் மூலம் அவர்களின் சம்பளம் மற்றும் படிகளில் இருக்கும் மறைமுக வரி வாய்ப்புகளை தெரிந்து கொள்ள முடியும் என்று வருமானவரித் துறை நம்புகிறது.

சமீபத்தில் ஐடி மற்றும் சிபிடிடி அதிகாரிகளுடன் நடத்திய உரையாடலின் முடிவில் இந்த முடிவை எடுத்திருக்கிறது. இதன் மூலமாக சம்பளம் பெறும் பணியாளர்களின் சம்பளத்திலிருந்து கணிசமான வரியை அதாவது டிடிஎஸ் பெறமுடியும் என்று வருமானவரித் துறை எதிர்பார்க்கிறது.

கடந்த நிதியாண்டில் மட்டும் வருமானவரித் துறைக்கு வந்த வருமானத்தில் 41% டிடிஎஸ் மூலம் வந்ததாகும்.

கடந்த 2012-2013 நிதியாண்டில் வருமானவரித் துறைக்குக் கிடைத்த மொத்த வருமானம் ரூ.5,58,970 கோடியாகும். இதில் ரூ.2,30,188 கோடி டிடிஎஸ் மூலம் வந்ததாகும்.

எனவே தற்போது மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறைகளில் பணிபுரியும் மேலதிகாரிகளின் சம்பள அமைப்பை ஆராய்ச்சி செய்ய இருக்கிறது.

மேலும் சென்ட்ரல் போர்ட் ஆஃப் டைரக்ட் டாக்சஸ் (சிபிடிடி), பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் சம்பள் மற்றும் அவர்களின் படி போன்றவற்றில் இன்னும் அதிகமான வரி வாய்ப்புகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சரிபார்க்குமாறு தனது டிடிஎஸ் கமிஷனர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

பெரிய நிறுவனங்கள் மட்டும் அல்ல. மாறாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள், பகுதி
நேர விரிவுரையாளர்களுக்கு வழங்கும் சம்பளத்திலும் வரிக்கான வாய்ப்பு இருக்கிறாதா என்று வருமானவரித் துறை பரிசோதனை செய்ய இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income-Tax department to put salary slips of top India Inc executives under TDS scanner

Income-Tax department has decided to scan the salary structure of top 
 India Inc executives of large corporates and PSUs to examine hidden tax 
 opportunities in the perks and reimbursements made to them.
Story first published: Sunday, June 9, 2013, 12:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X