
வங்கி லாக்கரின் அளவைப் பொறுத்தும் கட்டணங்கள் வேறுபடுகின்றன. இன்றைய தேதியில், பல்வேறு காரணிகளையும் சார்ந்திருக்கும் பாங்க் லாக்கர் கட்டணங்களை இவ்வளவு தான் என்று உறுதியிட்டுச் சொல்வதென்பது மிகக் கடினமான ஒன்றாகும். உதாரணமாக, அதிக அளவிலான டெபாசிட்களை வைத்திருப்பதனால் சிறப்புரிமை பெற்றுள்ள ஒரு வாடிக்கையாளர், மற்றவர்களைக் காட்டிலும், கட்டணங்களில் தனிச்சலுகை பெறுவதற்கான வாய்ப்பளிக்கப்படுகிறது.
பொதுவாக தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கிகளுடன் ஒப்பிடுகையில் அரசுடமை வங்கிகளில் லாக்கர் கட்டணங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. ஆயினும், இங்கும் லாக்கர்களின் இருப்பு போன்றவற்றைப் பொறுத்தே பல விஷயங்களும் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும், ஒவ்வொரு வங்கியிலும் வெவ்வேறான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக, பாங்க் ஆஃப் பரோடாவில் லாக்கரை வாடகைக்கு எடுக்கும்போது வங்கியின் பாத்தியதைக்குட்பட்டவாறு 3 வருட வாடகைத்தொகையை உள்ளடக்கிய ஒரு தொகை ஃபிக்ஸட் டெபாசிட்டாகவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நேர்ந்து, லாக்கரை உடைக்க நேர்ந்தால் அதற்கென ஒரு தொகையும் வசூலிக்கப்படுகிறது.
இதர அரசுடமை வங்கிகளான கார்ப்பரேஷன் வங்கி ஆகியவற்றில் இது போன்ற டெபாசிட்கள் தேவைப்படுவதில்லை. ஆனால், கார்ப்பரேஷன் வங்கியில் கட்டணங்கள் மிக உயர்வாக இருக்கும் என்பதையும் மறக்கக் கூடாது.
வங்கி லாக்கரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
கட்டணங்கள் தவிர்த்து, மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது வங்கி விதிமுறைகளையே. சில வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்கள் வலுவான காரணம் ஏதுமின்றி தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு லாக்கர்களை இயக்காமல் இருக்கும் பட்சத்தில், லாக்கர்களை திருப்பி ஒப்படைக்குமாறு அவர்களை கேட்டுக் கொள்கின்றன.
விதிமுறைகளுக்குப் பின் எளிதாக அணுகக்கூடிய தன்மையைப் பார்த்தல் அவசியம். உங்களுக்கு அடிக்கடி லாக்கரை திறக்கும் அவசியம் இருப்பின், உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வங்கியில் லாக்கரை வைத்திருப்பதே சிறந்ததாகும். தற்போது ஐடிபிஐ வங்கி மற்றும் ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கி போன்ற பல வங்கிகளில், 24x7 நேரமும் லாக்கரை இயக்கக்கூடிய வசதி உள்ளது.
மொத்தத்தில், தேவைகளையும், விதிக்கப்படும் கட்டணங்களையும் கருத்தில் கொண்டு லாக்கரைத் தேர்வு செய்தல் நலம்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications