
ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.விஸ்வநாதன் தலைமையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் உயர்மட்டக் குழு, அசோஸியேட் வங்கிகளை இணைப்பதற்கான அறிக்கையை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தயார் செய்து முடித்துவிடும். பின் அந்த அறிக்கைகளின் அடிப்படையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் அசோஸியேட் வங்கிகளை இணைக்கும் பணி தொடங்கும் என்று எஸ்பிஐ வங்கியின் சேர்மன் பிரதிப் சௌத்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் பிக்கனர், ஜெய்ப்பூர், ஐதராபாத், மைசூர், பாட்டியாலா மற்றும் திருவாங்கூர் முதலிய அசோசியேட் வங்கிகள் ஒருங்கிணைக்கப்படும் என்று சௌவுத்ரி தெரிவித்திருக்கிறார்.
ஸ்டேட் வங்கியின் 5 அசோசியேட் வங்கிகளில் 3 வங்கிகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. மேலும் 2 அசோசியேட் வங்கிகள் எஸ்பிஐ வங்கியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வரும். அதோடு அசோஸியேட் வங்கிகளை ஒருங்கிணைப்பதில் எஸ்பிஐ வங்கி பாரபட்சம் காட்டாது என்று அவர் தெரிவித்திருக்கிறார். அசோசியேட் வங்கிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் எஸ்பிஐ வங்கியின் பணியாளர்களின் நம்பிக்கை மற்றும் அவர்களின் பங்கேற்பு அதிகரிக்கும் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்பு எஸ்பிஐ வங்கியின் முதலீட்டுப் பணம் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் எஸ்பிஐ வெளியிட்ட நிதி அறிக்கை எஸ்பிஐயின் நிதி ஆதாரம் மிகவும் வலுவாக இருக்கிறது என்பதைத் தெரிவித்திருக்கிறது. மேலும் அசோசியேட் வங்கிகளை ஒருங்கிணைப்பதற்கு ரூ.1000 முதல் 3000 கோடி வரை செலவாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
எஸ்பிஐ வங்கி முதன் முதலாக கடந்த 2008ல் ஸ்டேட் பேங்க் ஆஃப் சௌராஷ்டிராவை தன்னோடு இணைத்துக் கொண்டது. பின்பு ஆகஸ்ட் மாதம் 2010ல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தூரையும் தன்னோடு இணைத்துக் கொண்டது.


Click it and Unblock the Notifications