பணியாளர்களின் ஊதியத்தை 8% வரை உயர்த்தும் இன்போசிஸ் மற்றும் விப்ரோ!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணியாளர்களின் ஊதியத்தை 8% வரை உயர்த்தும் இன்போசிஸ் மற்றும் விப்ரோ!!
சென்னை: நம் நாட்டின் இரண்டு பெரிய சாப்ட்வேர் நிறுவனங்கள் கடந்த வியாழக்கிழமை அன்று ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. அதில் ஒன்றான இன்போசிஸ், அதன் இந்திய பணியாளர்களுக்கு சராசரியாக 8% வரை ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. அதே போல், மற்றொரு நிறுவனமான விப்ரோ 6-8% ஊதிய உயர்வை இந்திய பணியாளர்களுக்கு அறிவித்துள்ளது.

நாராயண மூர்த்தி இன்போசிஸ் திரும்பிய சில வாரங்களில், நாட்டின் இரண்டாவது பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இது, தங்கள் இந்திய பணியாளர்களுக்கு 2014 நிதியாண்டில் சராசரியாக 8% வரை ஊதியத்தை உயர்த்த அறிவித்துள்ளது.

 

2013 பிப்ரவரி மாதம் ஊதிய உயர்வில் சேர்க்கப்படாத மற்ற நாட்டில் வேலை பார்க்கும் இதன் பணியாளர்களுக்கு சராசரியாக 3% வரை ஊதிய உயர்வு கொடுக்கப்படும் என்று அதன் அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது.இந்த ஊதிய உயர்வு ஜூலை 1, 2013 முதல் அமுலுக்கு வரும்.

 

மற்ற நிறுவனங்களின் படிநிலையை பொறுத்து, விப்ரோ நிறுவனம் தங்களின் இந்திய பணியாளர்களுக்கு சராசரியாக 6-8% வரை மற்றும் வெளிநாட்டில் பணியாற்றும் அதன் பணியாளர்களுக்கு 2-3% வரை ஊதிய உயர்வை கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது இந்த மாதத்தில் இருந்து அமுலுக்கு வருகிறது. திறமையான பணியாளர்களுக்கு கிடைக்கும் பரிசுத் தொகையும் இரண்டு இலக்கு விழுக்காடில் கொடுக்கப்பட்டுள்ளது என்று பெங்களூருவை தலைமையகமாக கொண்டிருக்கும் நியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய அதன் விற்பனை துறைக்கு சராசரியாக 8% வரை ஊதிய உயர்வை அறிவித்துள்ளது இன்போசிஸ். இது மே 1, 2013-ல் இருந்து அமுலுக்கு வருகிறது. பல இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் ஏப்ரல் அல்லது மே மாதம் தான் தங்களின் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை அளிக்கிறது.

கஷ்டமான சூழ்நிலையில் உள்ள இன்போசிஸ், அதன் போட்டியாளரான டிசிஎஸ் மற்றும் காக்னிசன்டை விட குறைவான வளர்ச்சியையே பெற்றிருக்கிறது. அதனால் இந்த வருடத்திற்கான ஊதிய உயர்வும் கால தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் போட்டி நிறுவனங்கள் அறிவித்த ஊதிய உயர்வால், சென்ற வருடம் அக்டோபர் மாதம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது.

இன்போசிஸ் மற்றும் சாப்ட்வேர் நிறுவனங்களின் இந்த ஊதிய உயர்வை பற்றி ஹெட்ஹாஞ்சஸ்.காம்-மின் (HeadHonchos.Com) முதன்மை அதிகாரி உதய் சோதி கூறுகையில், "சாப்ட்வேர் துறைகள் ஊதிய உயர்வை பொறுத்த வரை பழமை விரும்பிகளாகவே உள்ளனர்".

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys, Wipro hike employee salaries by upto 8%

Country's two IT companies Thursday announced wage hikes, with Infosys saying its employees in India will get an average 8 percent increase and Wipro offering 6-8 percent raise for offshore employees.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X