
இது சம்பந்தமாக ட்ராயின் சேர்மன் ராகுல் குள்ளர் கூறும் போது, ஜூலை 10 அன்று அமல்படுத்தப்படும் புதிய விதிமுறை, தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தவறான விஎஎஸ்ஸை(VAS) பரிசோதனை செய்யும். ஏற்கனவே இருக்கும் விதிமுறையில் சற்று தளர்வு உள்ளதால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மிக எளிதாக தப்பி விடுகின்றன. ஆனால் இந்த புதிய விதிமுறை தொலைத் தொடர்பு நிறுவனங்களின் விஎஎஸ் சேவைகளை மிக உறுதியாக நெறிப்படுத்தும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த புதிய விதிமுறையின் மூலம், இனி வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் மொபைல் எண்ணில் விஎஎஸ் சேவையை, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆக்டிவேட் செய்ய முடியாது என்று ட்ராய் தெரிவித்திருக்கிறது.
ஒருவேளை ஒரு வாடிக்கையாளரின் மொபைல் எண்ணில் விஎஎஸ் தவறாக ஆக்டிவேட் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் 155223 என்ற எண்ணுக்கு டயல் செய்து, அது சம்பந்தமான புகாரைத் தெரிவித்து, அதை உடனே டிஆக்டிவேட் செய்யலாம்.
இதற்கு முன்பு விஎஎஸ்ஸை ஆக்டிவேட் செய்யும் சாப்ட்வேர் வெளிநாட்டில் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டிருந்தது. அந்த நபர் எல்லா வாடிக்கையாளருக்கும் விஎஎஸ்ஸை வலுக்கட்டாயமாக ஆக்டிவேட் செய்ய தீவிர முயற்சி செய்தார். ஆனால் தற்போது இந்த சாப்ட்வேர் இந்தியாவைச் சேர்ந்த டிஎஸ்பி (டெலிகாம் சர்வீஸ் ப்ரொவைடர்ஸ்)யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை எந்த நேரத்திலும் தணிக்கை செய்ய முடியும் என்று ராகுல் குள்ளர் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications