
அறிக்கைகளின் படி, வேலையாட்களை கூட்டியதால் பணியார்களின் ஆக்கத்திறன் வாயிலாக வங்கிக்கு வளமையான ஆதாயப் பங்கை கொடுக்கும் என்று ஒரு ஆய்வு பரிந்துரைக்கிறது.
ஆக்சிஸ் வங்கி, எஸ் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி தான் இந்த பட்டியலில் உள்ள மற்ற மூன்று வங்கிகள். இந்த ஐந்து வங்கிகளும் சேர்ந்து கடந்த நிதியாண்டு முடிவான 31-மார்ச்,2013-ல் தங்கள் பணியார்களின் எண்ணிக்கையில் 15823 பேரை கூட்டியதால், மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கு அருகில் வந்து விட்டதாக கூறுகின்றனர்.
ஐந்து வங்கிகளின் மொத்த ஆள் கணக்கு மார்ச் 31, 2013-ல் 1,99,555 ஆக உள்ளது.
எச்.டி.எஃப்.சி. வங்கி 2,989 பணியாளர்களை சேர்த்துள்ளது . அதே போல் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 3,789 பணியாளர்களை சேர்த்துள்ளது மொத்தமாக 62,025 ஆக 2012-13 நிதியாண்டில் உயர்ந்துள்ளது என்று வங்கியின் சமீபத்திய ஆண்டறிக்கை கூறுகிறது.
2012-13 நிதியாண்டில் இந்த ஐந்து வங்கிகளின் பணியாளர்களுக்கான செலவு மொத்தமாக 13,000 கோடியை எட்டியுள்ளது. இந்த செலவு வழக்கத்தை விட 1,700 கோடி அதிகமாகியிருக்கிறது. இந்த அதிகரிப்பில் முதலிடம் வகிப்பது எச்.டி.எஃப்.சி வங்கி தான், அது பணியாளர்களின் எண்ணிக்கையை கூட்டுவதிலும் சரி, பணியாளர்களின் செலவை கூட்டியதிலும் சரி.
ஒரு பணியாளரால் கிடைக்கும் லாபம் ஐந்து வங்கிகளிலும் அதிகரித்திருந்தாலும், அதில் நான்கு வங்கிகள் இந்த வளர்ச்சியை பதிவு செய்து வைத்திருக்கிறது.
ஆக்சிஸ் வங்கிக்கு மட்டும் தான் கடந்த நிதியாண்டில் ஒரு பணியாளரால் கிடைக்கும் லாபம் 12.76 கோடியிலிருந்து 12.15 கோடியாக குறைந்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி போன நிதியாண்டில் நீண்ட நாட்களாக பணியில் இருக்கும் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, ஐந்து வருடத்திற்கு மேலாக பணியாற்றும் 15,500 பணியாளர்களுக்கு அவர்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலரான சந்தா கோச்சர் கையெழுத்து இட்ட பாராட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications