அரசு, நிதித்துறையை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, நான்-பாங்க்கிங் நிதி நிறுவனங்களை (என்பிஎஃப்சி), பொன்ஸி திட்டங்கள்(Ponzi schemes) போன்று, அசாதாரணமான ரிட்டர்ன்களை முதலீட்டாளர்களுக்கு அள்ளித் தருவதாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் டெபாசிட் திட்டங்களை, செயல்படுத்துவதிலிருந்து தடை செய்யக்கூடும்.
பாடுபட்டு சம்பாதித்த பணத்தை இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்து, இது போன்ற ஏமாற்றுக்கார நிறுவனங்கள் மற்றும் பிரமோட்டர்களால் ஏமாற்றப்படும் சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படப் போவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் மேற்கு வங்காளத்தில், வங்கி அமைப்போடு எத்தகைய தொடர்பும் இல்லாத பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்களின் பணத்தை மூழ்கடித்து தோல்வி கண்ட பொன்ஸி திட்டங்களின் பயங்கரத்தின் பின்விளைவாகவே இந்த யோசனை உருவாகியுள்ளது. .
பொதுவாக கீழ்தட்டு மற்றும் மத்தியதர வர்க்கத்தினரை குறிவைத்து, ரியல் எஸ்டேட் மற்றும் பண்ணை போன்றவற்றில் பிரதானமாக முதலீடு செய்யும் இந்நிறுவனங்கள். ரெகுலேட்டரால் எளிதில் நெருங்க இயலாத, இது போன்ற திட்டங்களின் விற்பனையை முடக்குவது என்பது மிகவும் கடினமான காரியம் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலிஸிமேக்கர்கள், ஒரு ஒருங்கிணைப்பு மையத்தை உருவாக்கி, அதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான சந்தை நிலவரத்தை பகிர்ந்து கொண்டு, என்பிஎஃப்சிக்கள் மற்றும் பொன்ஸி திட்ட நிறுவனங்கள் போன்றவற்றை இன்னும் நன்றாக ஒழுங்குமுறைப்படுத்த முடியுமா என்று ஆலோசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications