
இது குறித்து, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிர்வாக இயக்குனரும், பொது மேலாளருமான வி.கே.ஷர்மா கூறுகையில்,
புதிய வங்கி உரிமத்திற்காக விண்ணப்பிக்க முடிவு செய்திருக்கிறோம். இதுமட்டுமல்லாமல், நேரடியாக வங்கி செயல்பாடுகளில் இறங்காமல், புதிதாக தொடங்கும் வங்களின் பங்குகளை வாங்குவது தொடர்பாகவும் விவாதித்து வருகிறோம் என்றார்.
கடந்த பிப்ரவரி மாதம், வங்கிகளுக்கான புதிய உரிமம் வழங்குவதற்கான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. வரும் மார்ச் 2014 ஆம் ஆண்டுக்குள் சில வங்கி உரிமங்களை வழங்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
வங்கி உரிமம் வழங்குவதற்கான சட்ட திட்டங்கள், எல்ஐசி நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்திருந்தால், வங்கி உரிமத்திற்கு விண்ணப்பம் செய்வது அவசியமான ஒன்று என எல்ஐசி யின் முன்னாள் தலைவர் டி.கே.மல்ஹோத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம் குழுமம், ரெலிகேர் நிறுவனம் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் போன்ற நிறுவனங்களும் வங்கி உரிமம் பெற விண்ணப்பம் செய்கின்றன.


Click it and Unblock the Notifications