டாலருக்கு எதிரான ரூபாய் கடுமையான வீழ்ச்சி அடைந்திருக்கும் இந்த நிலை, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ரூபாயின் வீழ்ச்சி இந்தியாவின் பொருளாதாரத்திற்கு கெட்டதாக இருக்கலாம், ஆனால், டாலர்களில் வருமானம் பெறும், வெளி நாட்டு வாழ் இந்தியர்களுக்கு, 20% குறைவான விலையில் சொத்துக்களை வாங்க சரியான தருணமாக இருக்கிறது.
44-45 அளவில் இருந்த ரூபாய், கடந்த இரண்டாண்டுகளில் 58-59 என்ற அளவில், கிட்ட தட்ட 32%உயர்ந்து இருக்கிறது.
இது குறித்து ரியல் எஸ்டேட் வட்டாரங்களிடம் கருத்து கேட்டு, ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரங்களில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், சொத்து வாங்குவது தொடர்பான விவரங்களை கேட்பது பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. ரூபாயின் வீழ்ச்சி மட்டுமல்லாமல், புது தில்லியில் பண்ணை வீடு வாங்குவது தொடர்பான அரசின் கொள்கையும் வெளிநாடு வாழ் இந்தியர்களை, ரியல் எஸ்டேட் பக்கம் வர வழைத்துள்ளது.
Share This Article
English summary
NRIs buying properties in India as rupee depreciates
It's good to be a Non-Resident Indian (NRI) when the rupee is depreciating against US dollar. While the rupee's decline is not good for the economy, for NRIs it is like boon as they scout for new properties back home at 20 per cent cheaper rates.
Story first published: Monday, June 24, 2013, 18:29 [IST]