நிதி நெருக்கடியில் தொலைத்தொடர்புத் துறை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிதி நெருக்கடியில் தொலைத்தொடர்புத் துறை!!
கடும் நிதிப்பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தொலைத்தொடர்புத் துறையை அந்நிய நேரடி முதலீடுகளுக்கு திறந்து வைப்பதன் மூலம் புதிதாக நிதி கிடைக்கச் செய்யலாம் என்று தொலைத்தொடர்புத் துறையை குழு யோசனை தெரிவித்துள்ளது. எஃப்டிஐ உச்சவரம்பு தற்போது 74 % நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

"இதனை 100% மாற்றுவதற்கான ஆலோசனை நடைபெற்று வருகின்றது. தொலைத்தொடர்புத் துறையை குழு இதனை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த யோசனை முதலில் தொலைத்தொடர்பு கமிஷனால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். ஆனால், ஜூலை 2 ஆம் தேதி நடைபெற இருக்கும் கூட்டத்தில் இதனை கமிஷன் முன் சமர்ப்பிக்க இயலுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது " என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

 

எஃப்டிஐயின் உச்சவரம்பை நீக்குவது தொடர்பான மேலதிகத் தகவல்களைப் பெற இயலவில்லை.

 

உள்துறை அமைச்சக இயக்கமான தொலைத்தொடர்பு கமிஷன், அதன் ஜூலை கூட்டத்தில், தொலைத்தொடர்புத் துறையில் முதலீடுகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிதிக் கழகம் ஒன்றை அமைப்பதை பற்றி விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிகம்யூனிக்கேஷன்ஸ் கன்ஸல்டன்ட்ஸ் இந்தியா லிமிட்டெட் -இல் உள்ள அரசு பங்குகளை விற்பது, நேஷனல் ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க்கின் (என்ஓஎஃப்என்) ரிவ்யூ, வெவ்வேறு தொலைத்தொடர்பு வளர்ச்சி அளவுகோல்களின் அந்தஸ்து மற்றும் அவற்றில் செயல்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவையும் இக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன.

இந்திய தொலைத்தொடர்புத் துறையின் மொத்த கடன் தொகை சுமார் 2,50,000 கோடியாகும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இத்தொகையை திருப்பி செலுத்த வேண்டிய கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன.

உள்ளூர் வங்கிகளிலிருந்து புதிய கடன்களைப் பெறுவது ஆபரேட்டர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதினால், தொலைத்தொடர்புத் துறைக்கான தனிப்பட்ட ஒரு நிதி ஸ்தாபனம், நிதிகளை நல்ல முறையில் இயங்க வைக்கவும், சரியான வழியில் பயணிக்கச் செய்யவும் நிறுவனங்களுக்கு உதவுவதற்கென்றே செயல்பட உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: telecom fdi
English summary

DoT panel for completely opening up telecom sector to FDI

A DoT panel has suggested completely opening up the telecom sector to foreign direct investment, a move which is expected to bring in fresh funds into the industry that is facing a financial crisis.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X