டெலிநார்க்கு இன்! எடிஹாட்க்கு அவுட்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெலிநார்க்கு இன்! எடிஹாட்க்கு அவுட்!!
ஃபாரீன் இன்வெஸ்ட்மெண்ட் ப்ரொமோஷன் போர்டு (எஃப்ஐபிபி), கடந்த வெள்ளிக்கிழமை, இந்திய விமானத் துறையின் மிகப்பெரும் அந்நிய முதலீடாக விளங்கும் ஜெட்-எடிஹாட், சுமார் 2,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒப்பந்தத்தின் மீதான தீர்மானத்தை ஒத்தி வைத்து, கட்டுப்பாடு மற்றும் உரிமையை ஆகியவை குறித்த தெளிவான விளக்கங்களைக் கோரியுள்ளது.

 

எனினும், எகனாமிக் அஃபயர்ஸ் செக்ரெட்டரியான அரவிந்த் மாயாராம் அவர்கள் தலைமை வகிக்கும் எஃப்ஐபிபி, எஃப்டிஐயினால் முன்மொழியப்பட்டுள்ள நார்வேயின் டெலிநார் நிறுவனத்துக்கு, அதன் உள்நாட்டு துணை நிறுவனங்களின் பங்குகளை சுமார் 74% உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது.

எஃப்ஐபிபியின் கூட்டத்துக்குப் பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மாயாராம் "இது (ஜெட் ஏர்வேஸ்-எடிஹாட் திட்ட அறிக்கை) தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறப்பான கட்டுப்பாடு மற்றும் உரிமையை பற்றிய மேலும் சில தகவல்கள் எங்களுக்கு தேவைப்படுகின்றன." என்று கூறியுள்ளார்.

இத்திட்ட அறிக்கையின் படி, ஜெட் ஏர்வேஸ் சுமார் 24% பங்குகளை அபுதாபியைச் சேர்ந்த எடிஹாட் நிறுவனத்துக்கு சுமார் 2,058 கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிட்டுள்ளது.

தவிரவும், டெலிநார் அதன் உள்நாட்டு துணை நிறுவனமான டெலிவிங்ஸ் -இல் உள்ள பங்குகளை 25% சுமார் 74% வரை உயர்த்துவதற்கு அரசிடம் அனுமதி வேண்டியுள்ளது. "டெலிநார் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது." என்று மாயாராம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த டெலிநார் ட்ரான்ஸாக்ஷன் மூலம் உறுதியாக இன்ன அளவு எஃப்டிஐ தொகை வரக்கூடும் என்று உடனடியாகக் கூற இயலாது.

அரசு பின்னணியில், மேலும் பல அந்நிய முதலீடுகளை நாட்டிற்கு வரவழைக்கக்கூடிய வகையில் ஜெட்-எடிஹாட் ஒப்பந்தம் அதீத முக்கியத்துவம் பெறுகிறது.

சந்தை ஒழுங்குமுறையாளரான செபி மற்றும் போட்டி கண்காணிப்பாளரான சிசிஐ ஆகியவை ஜெட் ஏர்வேஸில் எடிஹாட்-இன் உரிமை அதிகாரங்கள், நிறுவனத்தின் ஈக்விட்டி கப்பிட்டலில் அதன் 24%பங்குகளை நிலைபெற்றுள்ளனவா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளும் பொருட்டு, ஏற்கெனவே இந்த ட்ரான்ஸாக்ஷனைப் பற்றிய விளக்கத்தை டொமஸ்டிக் கேரியரிடமிருந்து கோரியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FIPB defers decision on Jet-Etihad deal; Telenor gets go-ahead

The Foreign Investment Promotion Board (FIPB) on Friday deferred a decision on Rs 2,000-crore Jet-Etihad deal, the largest foreign investment in the Indian aviation sector, and sought clarity on control and ownership.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X