இந்தியாவின் தலை சிறந்த இரண்டாவது நிறுவனம்: ரிலையன்ஸ்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் தலை சிறந்த இரண்டாவது நிறுவனம்: ரிலையன்ஸ்!!!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட். (RIL), மாநில அரசால் நடத்தப்படும் எண்ணை மற்றும் எரிவாயு கழகத்தை (ஓஎன்ஜிசி) பின்னுக்குத் தள்ளி, டாடா கன்ஸல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தை அடுத்து இந்தியாவின் இரண்டாவது தலை சிறந்த நிறுவனமாக முன்னேறியுள்ளது.

இடைப்பட்ட நேரத்தில், ஆர்ஐஎல் -இன் பங்குகள் ஒவ்வொன்றும் சுமார் 818 ரூபாய் என்ற வீதத்தில், பிஎஸ்இயின் முந்தைய அடைப்பை விட சுமார் 0.68% குறைவான விகிதத்தில் விற்பனையாகியுள்ளது. மற்றொரு புறம், ஓஎன்ஜிசியின் பங்குகள் ஒவ்வொன்றும், 10:11 மணியளவில் சுமார் 303.05 ரூபாய் என்ற வீதத்தில், பிஎஸ்இயில் சுமார் 1.59 சதவீதம் குறைவான விகிதத்தில் விற்பனையாகியுள்ளது.

சுமார் 2,60,879 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ள, எஃப்எம்சிஜி ஜாம்பவானாகிய ஐடிசி, இந்தியாவின் தலை சிறந்த நிறுவனங்களுள் நான்காவது இடத்தையும், சுமார் 1,91,449 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ள, மாநில அரசின் கோல் இந்தியா லிமிட்டெட் இதற்கு அடுத்த இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

சந்தை மூலதனம் அல்லது பட்டியலிடப்பட்டுள்ள ஒரு நிறுவனத்தின் மதிப்பு, அதன் பங்குகளின் மொத்த எண்ணிக்கையை, ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது நேரத்தின் பங்கு விலையோடு பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RIL surpasses ONGC to become India's second most valued firm

Mukesh Ambani led Reliance Industries Ltd. (RIL) has overtaken state-run Oil and Natural Gas Corp (ONGC) to become India's second most valued firm after Tata Consultancy Services (TCS).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X