இந்தியாவில் அதிகமான அளவில் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனமான பாரதி ஏர்டெல், தனது புதிய சேவைகளை மிக வேகமாக வாடிக்கையாளர்களுக்கு விற்று வருகிறது. தற்போது, தொழில் போட்டியின் காரணமாகவும் மற்றும் சேவையை விரிவாக்கவும், 4ஜி சேவையின் கட்டணத்தை 31% அளவிற்கு ஏர்டெல் குறைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2ஜி சேவை
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் வழங்கி வரும் 2ஜி டேட்டா சேவையின் கட்டணத்தை 90% அளவிற்கு குறைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
வோடோபோன் மற்றும் ஐடியா
வோடோபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களின் போட்டியால், ஏர்டெல்லின் லாபம் சமீப காலங்களில் கணிசமாக குறைந்து வருவதாலும், புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விலைக் குறைப்பைச் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4ஜி சேவை
இந்தியாவில் 4ஜி சேவையை வழங்கும் ஒரே நிறுவனம் பாரதி ஏர்டெல் ஆகும். ஏனினும் மிக விரைவில் தனது 4ஜி சேவையை இந்தியா முழுவதும் வழங்க இருக்கும் முகேஷ் அம்பானியன் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் கொடுக்கும் கடும் போட்டியைச் சமாளிக்க ஏர்டெல் இந்த விலைக் குறைப்பைச் செய்திருக்கிறது.
விலைக் குறைப்பு
இந்த விலைக் குறைப்பிற்கு பிறகு, ஏர்டெல் 4ஜி டேட்டா சேவையின் விலை ரூ. 450க்கு விற்கப்படுகிறது. ஆனால் இதற்கு முன்பு ரூ. 650க்கு விற்கப்பட்டது.


Click it and Unblock the Notifications