இமெயில் மூலம் இனி பணம் பரிமாற்றம் செய்ய முடியாது!- திருவாங்கூர் ஸ்டேட் வங்கி

இமெயில் மூலம் இனி பணம் பரிமாற்றம் செய்ய முடியாது!- திருவாங்கூர் ஸ்டேட் வங்கி
பணம் பரிமாற்றம் மற்றும் பணம் பரிவரத்தனை சம்பந்தமான விண்ணப்பங்களை இனி இ-மெயில்கள் மூலம் அனுப்ப வேண்டாம் என்று தனது வெளிநாட்டு வாழ் இந்திய வாடிக்கையாளர்களை ஸ்டடேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் கேட்டுக் கொண்டிருக்கிறது.

உலக அளவில் சைபர் குற்றங்களில் ஈடுபடும் சிலர், வெளிநாடுகளில் வாழும் கேரள மக்கள் ஒரு சிலரின் இ-மெயில்களை, சமீபத்தில் கடத்தி, அந்த இமெயில்கள் மூலம் பணம் பரிமாற்றம் செய்யுமாறு ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர்க்கு விண்ணப்பங்களை அனுப்பி மோசடி செய்திருக்கின்றனர். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து திருவாங்கூர் ஸ்டேட் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

"பணம் பரிமாற்ற மோசடியைத் தடுப்பதற்காகவே, இனிமேல், பணம் பரிமாற்றம் மற்றும் பணம் பரிவர்த்தனை செய்வதற்கு இமெயில்கள் மூலம் விண்ணப்பம் அனுப்ப வேண்டாம். மாறாக இன்டர்நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்துங்கள் என்று வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்" என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் வங்கியின் தலைமை மேலாளர் சஞ்சீவ் கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

கேரளாவில் இருக்கும் பெரும்பாலான வங்கிகளில், வெளி நாடுகளில் வாழும் கேரள மக்களின் பணம் அதிகமாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது. இதைத் தெரிந்து வைத்திருக்கும் சைபர் குற்றங்களில் ஈடுபடுபடும் மோசடியைாளர்கள், கேரள மக்களின் இமெயில்களைக் கடத்தி அதன் இமெயில்கள் மூலம், பணம் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று வங்கிக்கு விண்ணப்பங்களை அனுப்பி இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

திருவாங்கூர் ஸ்டேட் வங்கி, கேராளாவில் மட்டும் 25% வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணக்குகளை வைத்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சில வெளிநாட்டு வாழ் வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்குகளில் இமெயில் மூலமாக பணம் பரிமாற்ற மோசடி நடந்திருப்பதாக புகார் தெரிவித்திருக்கின்றனர். எனவே தற்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் இமெயில்களை வங்கி தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறது.

இமெயில்களைக் கடத்திய மோசடிப் பேர்வழிகள், இதற்கு முன்பு வங்கிக்கும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் நடந்த பணம் பரிமாற்றத் தகவல்களை மிகத் திறமையாக, அப்படியே காப்பி செய்து, நாமினியின் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றையும் காப்பி செய்து, அதை பேஸ்ட் செய்து, வங்கிக்கு பணம் பரிமாற்றும் செய்யுமாறு விண்ணப்பங்களை அனுப்பி இருக்கின்றனர்.

ஒரு இமெயில் மூலம், நாள் ஒன்றுக்கு, ரூ.5,00,000 வரை பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியும். தற்போது இமெயில் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் முறை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக வாடிக்கையாளர்களுக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று சஞ்சீவ் கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த மாதம் பணம் பரிமாற்ற செய்ய வேண்டி வந்த போலி இமெயில்களை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டோம். மேலும் ஒரு சில வாடிக்கையாளர்கள், தாங்கள் பணம் பரிமாற்றம் செய்ய வேண்டி இமெயில் மூலம் விண்ணப்பங்களை அனுப்பவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர். ஆனால் போலியான இமெயில் விண்ணப்பங்களை பரிசோதனை செய்து பார்த்த போது, அது முந்தைய பணம் பரிவர்த்தனை மெயில்களை காப்பி செய்து அனுப்பப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டு பிடித்தோம் என்று திருவாங்கூர் ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

துபாயில் வசிக்கும் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் கூறும் போது, இமெயில் விண்ணப்பங்கள் மூலம் நடக்கும் பணம் பரிமாற்ற மோசடி குறித்து, திருவாங்கூர் ஸ்டேட் வங்கி தனக்கு இரண்டு எச்சரிக்கை இமெயில்களை அனுப்பி வைத்திருப்பதாகவும் மேலும் இனிமேல், இமெயில் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்ய வேண்டி விண்ணப்பம் அனுப்ப வேண்டாம் என்று வங்கி கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 5 - 6 ஆண்டுகளில் மட்டும் வாடிக்கையாளர்களின் இமெயில்கள் கடத்தப்பட்டு அதன் மூலம் நடந்த பணம் பரிவர்த்தனை மோசடி காரணமாக, கேரள வங்கிகள் மிகப் பெரிய அளவில் நட்டத்தைச் சந்தித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற நிகழ்வுகள் கொச்சியில் அதிகமாக நடைபெறுவதாகவும் அதற்கடுத்து திருவனந்தபுரத்தில் நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துபாயில் திருவாங்கூர் ஸ்டேட் வங்கிக் கிளைகளைத் திறப்பதற்காக சஞ்சீவ் கிருஷ்ணன் துபாயில் இருந்தார். அன்னிய நாட்டுப் பணங்களைப் பரிமாற்றும் மற்றும் பரிவர்த்தனை செய்யும் சிட்டி எக்ஸ்சேஞ்ச் என்ற நிறுவனத்தை அவர் நிர்வகித்து வந்தார். அந்த நிறுவனம் சமீபத்தில் ராஸ் அல் கைமா, அபு தாபி மற்றும் அல் அய்ன் ஆகிய இடங்களில் தனது புதிய கிளைகளைத் தொடங்கி இருக்கிறது.

நாள் ஒன்றுக்கு, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் கேரள வங்கிகளுக்கு ரூ.120 மில்லியன் முதல் ரூ.150 மில்லியன் வரை முதலீடுகள் வரும். தற்போது டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதால், அந்த முதலீட்டின் அளவு இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. அதாவது ரூ.300 மில்லியன் அளவிற்கு அதிகரித்திருக்கிறது என்று சஞ்சீவ் தெரிவித்திருக்கிறார்.

சிட்டி எக்ஸ்சேஞ்ச் துபாயில் 12 கிளைகளைக் கொண்டிருக்கிறது. வரும் காலங்களில் அல் அய்னில் மேலும் 13 புதிய கிளைகள் திறக்கப்படும் என்று அதன் தலைமை மேலாளர் சலியம்மா சகிரா தெரிவித்திருக்கிறார்.

துபாயில் தொடங்கப்பட்டிருக்கும், திருவாங்கூர் ஸ்டேட் வங்கியின் புதிய கிளை மூலம், வெளிநாட்டு வாழ் கேரள மக்களின் 16,000 வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாக, துபாயில் இருக்கும் திருவாங்கூர் ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.

வங்கிகள் தங்கத்தை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று இந்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறிய பின்பு, இதுவரை கனடா வங்கியின் கூட்டணியில் செய்து வந்த நங்க நாணய விற்பனையை தற்போது திருவாங்கூர் ஸ்டேட் வங்கி நிறுத்தி வைத்திருப்பதாக அதன் தலைமை மேலாளர் தெரிவித்திருக்கிறார். தங்க நாணயங்களை விற்பது சம்பந்தமாக கனடா வங்கியோடு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால் தங்க நாணயங்களை விற்பனை இந்த நிதித்துறை அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+