
மேலும் வங்கிகள் வியாபார தொடர் திட்டங்களை (பிசிபி) அமைக்க வேண்டும். அந்த திட்டங்கள் வங்கிகள் கொண்டிருக்கும் எல்லா பாலிசிகள், விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை கவர் செய்கிறதா என்று அடிக்கடி பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அதன் மூலம் வங்கியின் தொடர் செயல்பாடு, கடன்களை திரும்பப் பெறுவது போன்றவற்றை உறுதி செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
அதோடு இந்த பிசிபிக்கள், மக்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளுக்கு ஏற்படும் விபத்துகள் ஏற்படாத வகையில் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அப்படிப்பட்ட விபத்துகள் ஏற்படும் போது, பொருளாதார, சட்டம் மற்றும் இதர இழப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை பிசிபிக்கள் கொண்டிருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
அத்தகைய விபத்துகள் ஏற்படும் போது, அதை எதிர்த்துப் போராடுவதற்கு, மீட்பு நடவடிக்கைகளையும் வங்கிகள் நடத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications