
குஜராத்தில் உள்ள டாட்டா வாகன உற்பத்தித் தளத்தை, சிறிய வாகனங்களான இன்டிகா மற்றும் விஸ்டா போன்றவற்றைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்த இருக்கிறது. தற்போது இந்த தளத்தில் நானோ வாகனங்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. மேலும் இந்த நிதியாண்டில் இந்த தளம் 20 சதவீதம் அளவிற்கும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த புதன் கிழமை அன்று 5 மேம்படுத்தப்பட்ட புதிய கார்களைக் களமிறக்கியது. குறிப்பாக நானோ (2013), இன்டிகா சிஎஸ், சுமோ கோல்டு மற்றும் சஃபாரி ஸ்டார்ம் போன்ற கார்கள் இவற்றில் அடங்கும்.
புதிய கார்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் டாட்டா மோட்டாரின் தலமை மேலாளர் கார்ல் ஸ்லிம் கூறும் போது, நாங்கள் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் நானோ அதிக பயன்பாடுகளை வழங்க இருக்கிறது. மினி கூப்பர் அல்லது ஃபியட் 500 போன்றவை வழங்கிய வாய்ப்புகளை தற்போது நானோ வழங்கி வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
ஒரு காலத்தில் எஸ்யுவி சந்தையை ஆண்டு வந்த டாட்டா மோட்டார்ஸ் தற்போது எம்&எம் நிறுவனத்திடம் இழந்த நிற்கிறது. எனவே மீண்டும் சந்தையைப் பிடிக்க, மிகவும் மேம்பட்ட வசதிகளுடன் கூடிய லேண்ட் ரோவர் கார்களைக் களமிறக்க டாட்டா மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது. மேலும் நகர்புற எஸ்யுவி சந்தையையும் பிடிக்க டாட்டா மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications