
எம்ப்ளாயிஸ் பிராவிடன்ட் ஃபண்ட் ஆர்கனைசேஷன் (இபிஎஃப்ஒ) தனது முதலீட்டாளர்களின் முதலீட்டுக்கு 2012 - 2013வது நிதியாண்டில் 8.5 சதவீத வட்டியை வழங்கியது. அதே நேரத்தில் 2011 - 2012வது நிதியாண்டில் இந்த வட்டி குறைவாக அதாவது 8.25 சதவீத வட்டியை வழங்கியது.
வரும் நிதியாண்டில் பிராவிடன்ட் ஃபண்ட் வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை ஏற்கனவே இபிஎஃப்ஒ முடிவு செய்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக பிராவிடன்ட் ஃபண்ட் வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி சம்பந்தமாக, இபிஎஃப்ஒ, தனது ஆட்சி மன்றமான ஃபைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட் கமிட்டி (எஃப்ஐசி)யிடம் தனது பரிந்துரைகளைத் தெரிவிக்கும். பின்னர் இந்த பரிந்துரைகள், தொழிலாளர் நல அமைச்சரின் தலைமையின் கீழ் இயங்கும் சென்ட்ரால் போர்ட் ஆஃப் டிராஸ்டீஸ் (சிபிடி)யில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படும். சிபிடி முடிவு செய்து ஒப்புதல் அளித்தவுடன் அதை அமல்படுத்துவதற்காக நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இபிஎஃப்ஒ சமீபத்தில் சிபிடியை மாற்றி அமைத்தது. அதன் விளைவாக வரும் டிரஸ்டீஸ் கூட்டத்தில் எஃப்ஐசியிலும் மாற்றும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சென்ட்ரல் பிராவிடன்ட் ஃபண்டின் கமிஷனராக கே.கே ஜலன் பொறுப்பேற்று இருக்கிறார். அவர் தலைமையில் இபிஎஃப்ஒ இனிமேல் செயல்படும். அடுத்த மாதம் சிபிடி கூட்டம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசின் பாதுகாப்பு பத்திரங்களில் ஏற்பட்ட சிறிய சரிவின் காரணமாக, ஃபிராவிடன்ட் ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டிற்கு, வரும் நிதியாண்டில் வட்டி விகிதம் மாற்றப்படாமல் இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இபிஎஃப்ஒவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2008 ஆம் ஆண்டின் இன்வெஸ்ட்மென்ட் பேட்டர்ன்படி, இபிஎஃப்ஒ ஃபிராவிடன்ட் ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டிலிருந்து 55 சதவீதம் அளவிற்கு அதாவது 5 லட்சம் கோடி அளவிற்கு மாநில மற்றும் மத்திய அரசுகளில் பாதுகாப்பு பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications