லோன்களை திரும்பப் பெறுவதில் தீவிரம் காட்டும் ஸ்டேட் வங்கி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லோன்களை திரும்பப் பெறுவதில் தீவிரம் காட்டும் ஸ்டேட் வங்கி!!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, தன்னிடம் லோன் வாங்கியவர்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெறுவதில் தீவிர நடவடிக்களை எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தனது கிரடிட் ரேட்டிங்கை உயர்த்த முடியும் என்று ஸ்டேட் வங்கி நம்புகிறது.

 

(SBI Home Loans: 3 reasons to opt for them)

மேலும் ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கிய நிறுவனங்கள், நடத்த முடியாமல், மூடுவிழா நடத்த இருக்கும் அந்த நிறுவனங்களிடம் இருந்து வரும் விண்ணப்பங்கள் மீது மிக விரைவாக நடவடிக்கை எடுத்து, அந்த நிறுவனங்கள் மிக எளிதாக லோனைச் செலுத்தும் வகையில், மாற்றத்தைக் கொண்டு வரவும் ஸ்டேட் வங்கி தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கு முன்பாக, மூடு விழா நடத்தும் நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது ஸ்டேட் வங்கி மிக மெதுவாக நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

31 மார்ச் 2013 நிலவரத்தின் படி ஸ்டேட் வங்கியின் நிகர என்பிஎ 4.75 சதவீதமாகவும், நெட் என்பிஎ 2.1 சதவீதமாகவும் இருந்தது. தற்போது இருக்கும் பொருளாதார மந்த நிலையில், லோன் வழங்குவதிலும் ஸ்டேட் வங்கி சில மாற்றங்களைச் செய்திருக்கிறது.

மார்ச் மாத முடிவில் ஸ்டேட் வங்கியின் என்பிஎ தொகை ரூ.11,368 கோடியாக இருந்தது. அதன் கவரேஜ் விகிதம் 66.58 சதவீதமாக இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI to adopt aggressive approach in dealing with defaulting firms - லோன்களை திரும்பப் பெறுவதில் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் ஸ்டேட் வங்கி

India's largest lender State Bank of india (SBI) has decided to aggressively reduce its NPAs as they continue to mount, posing risks to its asset quality and credit rating.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?