கடந்த மார்ச் மாத முடிவில் சீனாவின் வெளிநாட்டுக் கடன் 764.97 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது என்று சீனாவின் ஃபாரெக்ஸ் ரெகுலேட்டர் என்ற அமைப்புத் தெரிவித்திருக்கிறது. 2012 ஆம் ஆண்டின் முடிவில் சீனாவின் வெளிநாட்டுக் கடன் 737 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என்று அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
(Infosys may cut FY'14 revenue guidance to 4-6%: Morgan Stanley)
சீனாவினால் கட்டமுடியாத மத்திய கால மற்றும் நீண்ட கால வெளிநாட்டுக் கடன்களின் மொத்த தொகை கடந்த டிசம்பர் மாத முடிவில் 197.06 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 199 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது என்று ஸ்டேட் அட்மினிஸ்ட்ரேசன் ஆஃப் ஃபாரின் எக்ஸ்சேன்ச் (SAE) தெரிவித்திருப்பதாக சின்குவா என்ற செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டு மட்டும் சீனாவினால் கட்டமுடியாத குறுகிய கால வெளிநாட்டுக் கடனின் மொத்த தொகை 541 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 566 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு உயர்ந்திருப்பதாக அந்த செய்தி தெரிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications