அமெரிக்கவின் கர்ஜனை: இந்தியா! விதிகளைப் பின்பற்ற தயாராக இல்லை..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கவின் கர்ஜனை: இந்தியா! விதிகளைப் பின்பற்ற தயாராக இல்லை..
அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் இன்று இந்திய வர்த்தக மற்றும் தொழில் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளனர். புது தில்லி சர்வதேச விதிகளை பின்பற்ற தயராக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

"இந்திய தொழில்துறை கொள்கை, வர்த்தக தடைகள், பரவலான திருட்டு, வரி பாகுபாடு, மற்றும் நமது அறிவுசார் சொத்து உரிமைகள் மீதான ஒரு முழுமையான அலட்சியம் போன்றவற்றை பார்க்கும் பொழுது, இந்தியா சர்வதேச நடைமுறைகள் மற்றும் விதிகளை பின்பற்றத் தயாராக இல்லை என்பதை இப்போது உணர்ந்து கொள்ளலாம்", என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் மார்ஷா பிளாக்பர்ன் காங்கிரஸ் விசாரணையின் போது கூறினார்.

"இதைவிட மிக மோசமான விஷயம், அவர்கள் தங்களுடைய தவறுகளை மறைத்து தங்களை தூயவர்களாக காட்டிக் கொள்ள முயற்சி செய்வதுதான்". இதோ அதற்கு உரிய உதாரணம். "கடந்த வாரம், அமெரிக்காவுக்கான இந்திய தூதர், பல மில்லியன் அமெரிக்க வேலைவாய்புகளை தட்டிப் பறிக்கும் அவர்களுடைய தவறான நடைமுறைகளை நியாயப்படுத்தி என்னுடைய அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்", என பிளாக்பர்ன், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் அனுப்பிய கடிதத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.

"இந்தியாவின் கொள்கைகள் உலகம் முழுவதற்கும் ஏமாற்றத்திற்கான முன்னுதாரணமாக கருதப்படுகிறது. தன்னை அமெரிக்காவின் நண்பர் என அழைத்துக் கொள்ளும் எந்த ஒரு நாடும் இந்தியாவைப் போன்று தனிமைப்படுத்தும் நடைமுறைகளை கையாளுவதில்லை", என திரு பிளாக்பர்ன் கூறினார்.

"நாங்கள் இரு தரப்பு ஒப்பந்தத்தை வரவேற்கின்றோம். ஆனால் இந்திய அரசாங்கம் தீவிரமாக இருதரப்பு உறவுகளை அச்சுறுத்தும் போக்கை அல்லது ஆபத்துகளை குறைக்க உடன்பட வேண்டும்", என டென்னெஸியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்தார். மேலும் "வர்த்தக ரீதியான சிக்கல்: இந்திய தொழில்துறை கொள்கை அமெரிக்க நிறுவனங்கள் எவ்வாறு பாதிக்கிறது" என்கிற தலைப்பிலான விசாரணையில்அவர் தெரிவித்தார்.

இந்த விசாரணையை எரிசக்தி மற்றும் வர்த்தகத் துறைகளின் உப துறைகளான வர்த்தகம், உற்பத்தி, மற்றும் வர்த்தக துணைக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

இந்திய தூதர் எழுதிய கடிதம் கூட அமெரிக்க - இந்தியப் பிரச்சினைகள் பற்றிய காங்கிரஸ் விசாரணையில் இந்தியாவின் நிலையை விளக்கும் ஒரு சான்றாக பதிவு செய்யப்பட்டது.

அறிவுசார் சொத்து உரிமைகள் தொடர்பான இந்திய கொள்கைகள் மீது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய நியூ ஜெர்சி காங்கிரஸ் உறுப்பினர் லியோனார்டு லான்ஸ், "அமெரிக்கா தன்னுடைய ஐபி உரிமைகளை பாதுகாக்கும் பகுதியில் தன்னுடைய தலைமை பண்பை வெளிப்படுத்த வேண்டும்". என தெரிவித்தார்.

"அறிவுசார் சொத்து சம்பந்தப்பட்ட இந்திய மாதிரியை பின்பற்றும் வளர்ந்துவரும் பிற நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலை உண்டாக்குகின்றன. நாம் நம்முடைய வணிக பங்குதாரர்களுக்கு மிகத் தெளிவாக இந்த கொள்கைகள் ஒரு மோசமான முன்னுதாரணம் என்றும் எவ்வாறு நமது பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்களின் நன்மைகளை வலுவிழக்க செய்கின்றன என்பதையும் தெரிவிக்க வேண்டும்", என்று அவர் கூறினார்.

டெக்சாஸ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் ஆல்சன் அண்மையில் இந்திய கொள்கைகளுக்கு எதிரான தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். அவர் இந்தியக் கொள்கைகள் மிக மோசமாக அமெரிக்க நிறுவனங்களைப் பாதிக்கிறது. ஆகவே நாம் புது தில்லிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

"இந்தியா காப்புரிமைகளை ரத்து செய்த பொழுதும், புற்று நோய் சிகிச்சைக்கான கட்டாய உரிமையை வழங்க மறுத்த பொழுதும் அல்லது உள்ளூர் உள்ளடக்கத்தை தேவைகள் முன்னிறுத்தப்படுகின்றன என்பதை கேட்கும் பொழுதும் உங்களைப் போல என்னுடைய ரத்தமும் கொதிக்கிறது", என அவர் தெரிவித்தார்.

"ஒரு தந்தை தன்னுடைய மகன் தனக்கு கோபம் வரும் செய்கைகளைச் செய்யும் பொழுது எவ்வாறு அவனைச் சரி செய்வாரோ அதே போன்று நாமும் ஒரு நாடாக இருந்து இந்தியாவை வழி நடத்த வேண்டும். இதையே என்னுடைய தந்தையும் பின்பற்றினார். நான் என்னுடைய செயல்களில் இருந்து திசைமாறி அவருக்கு கோபம் வரும் படி செய்யும் பொழுது அவர் என்னை கட்டி அனைத்து என்னுடைய தோளில் அழுத்தமாக கை ஊன்றி தன்னுடைய விரல்களால் எனக்கு வலி உண்டாக்கும் படி செய்வார். நம்முடைய அரசாங்கமும் அதே மாதிரியான உறுதியான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்", என திரு ஆல்சன் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

அமெரிக்க சட்டமியற்றுபவர்கள்: விதிகளைப் பின்பற்ற இந்தியா தயாராக இல்லை

Top American lawmakers today criticised India's trade and business policies, saying that New Delhi is not willing to play by the rules.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X