
(How to check Employees' Provident Fund (EPF) balance online?)
இது சம்பந்தமாக இபிஎஃப்ஒவின் சென்ட்ரல் ப்ராவிடன்ட் ஃபண்ட் கமிசனர் கே கே ஜலான் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த செய்தியில் " ஓய்வூதிய வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்யவும் மற்றும் பணத்தை எடுக்கவும் வரும் ஜூலை 3 அல்லது 4 முதல் புதிய ஆன்லைன் வசதியைக் களிமிறக்கத் திட்டமிட்டிருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இதற்கு முன்பு இந்த வசதியை ஜூலை 1 முதலே அமல்படுத்த இபிஎஃப்ஒ திட்டமிட்டிருந்தது.
புதிய தொழிலாளர் அமைச்சர் சிஸ் ராம் ஓலாவை சந்தித்த பின்பு ஜலான் இந்த புதிய திட்டத்தைப் பற்றி அறிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிதியாண்டில் மட்டும் 1.2 கோடி அளவிற்கு ஓய்வூதிய விண்ணப்பங்கள் வரும் என்று இபிஎஃப்ஒ எதிர்பார்க்கிறது. ஜூன் 11 வரை 5,38,704 ஓய்வூதிய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக இபிஎஃப்ஒ தெரிவித்திருக்கிறது. எனினும் தனது பகுதிவாரியான தலைவர்களை வரும் ஜூலை 5ஆம் தேதி சந்தித்து, 3 நாட்களுக்குள் ஓய்வூதிய விண்ணப்பங்களை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ள இருக்கிறது.
இபிஎஃஒ ஒரு புதிய மையத்தை கட்டி வருகிறது. ஆன்லைன் மூலம் வரும் விண்ணப்பங்கள் ஆகியவற்றை இந்த மையத்திலிருந்து இபிஎஃஒ கவனிக்கும் என்று தெரிகிறது.
ஓய்வூதிய சந்தாதாரங்களின் மிக முக்கிய பிரச்சினை என்னவென்றால் அவர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்களிலிருந்து புதிய நிறுவனங்களுக்கு மாறும் போது, தங்களின் ஓய்வூதிய வங்கிக் கணக்கை மாற்றுவதில் அதிகச் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த பிரச்சினையை சென்ட்ரல் கிளியரன்ஸ் ஃபெசிலிட்டி தீர்த்து வைக்கும் என்று ஒரு யூனியன் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்த ஆன்லைன் மூலம் சந்தாதாரர்கள், தங்களது விண்ணப்பங்கள், பண எடுப்பு பற்றிய விவரங்கள் மற்றும் பணம் பரிமாற்ற விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த புதிய அமைப்பில், சந்தாதாரரின் ஓய்வூதிய கணக்கைப் பற்றிய பின்னனி அறிக்கை அவர்களின் முந்தைய நிறுவனங்களிடமிருந்து இபிஎஃப்ஒவினால் பெறப்படும்.
தற்போது ஓய்வூதிய சந்தாதாரர்கள் பணத்தைப் பெறவதற்கு தற்போது வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து தங்களது விண்ணப்பத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும்.
எனினும், ஓய்வூதிய சந்தாதாரர்கள் தங்களின் வேலை செய்யும் நிறுவனங்களை மாற்றும் போது தங்களது ஓய்வூதிய வங்கிக் கணக்கை மாற்றுவதில் எந்தவித பிரச்சினைகளையும் சந்திக்காமல் இருக்க அவர்களுக்கு நிரந்தர கணக்கு எண்ணை வழங்கத் திட்டமிட்டிருக்கிறது. இந்த திட்டம் அடத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications