இந்திய உற்பத்தித் துறையில் மீண்டும் ஒரு வீழ்ச்சி

இந்திய உற்பத்தித் துறையில் மீண்டும் ஒரு வீழ்ச்சி
இந்தியாவின் உற்பத்தித் திறன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜூன் மாதத்திலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஹெச்எஸ்பிசி இந்தியா, உற்பத்தி பிஎம்ஐ (PMI) சுட்டிக்காட்டியுள்ளது.

மார்ச் 2009 ஆம் வருடத்திலிருந்து இன்று வரையிலான காலகட்டத்தில் முதல் முறையாக ஜூன் மாதத்தின் போது புது ஆர்டர்கள், சிறிதளவிலான வீழ்ச்சியைக் கண்டுள்ளன. ஹெச்எஸ்பிசி பர்சேஸிங் மானேஜர்'ஸ் இன்டெக்ஸ் (பிஎம்ஐ) ஜூன் மாதம் வரை தொடர்ந்து 51 மாதங்களுக்கு மாற்றமில்லாதிருந்த வரம்பை மீறியதான ஒரு அளவை பதிவு செய்துள்ளது. மே மாதத்தின் போது சுமார் 50.1 ஆக இன்டெக்ஸ் அளவீடு இருந்துள்ளது. நாட்டின் உற்பத்தித் துறை சிறிதளவு விரிவாக்கம் செய்யப்பட்டதற்கு ஈடு கொடுக்கும் வண்ணம் சமீபத்திய இன்டெக்ஸ் அளவீடு 50.3 ஆக சற்றே உயர்ந்துள்ளது.

இந்தியாவின் வலுவற்ற பொருளாதார நிலையே, இத்தகைய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்று குழு உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர். புது வேலைகளுக்கு அதிக அளவிலான போட்டி நிலவுவதாகவும் அறிக்கைகள் உரைக்கின்றன. எனினும், பிரதான அயல்நாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகள் அதிகரித்துள்ளதனால் ஏற்றுமதி வர்த்தகம் ஜனவரி மாதம் துவங்கி கணிசமான விகிதத்தில் உயர்ந்துள்ளது. நுகர்வோர் மற்றும் நடுத்தரப் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு அதிக அளவில் அயல்நாட்டு ஆர்டர்கள் கிடைத்துள்ளன. ஆனால், முதலீட்டுப் பொருள்கள் துறை சரிவைச் சந்தித்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹெச்எஸ்பிசியின் இந்தியா மற்றும் ஏசியான் (ASEAN) முதன்மை பொருளாதார நிபுணரான லெய்ஃப் எஸ்கெஸன் அவர்கள், இந்திய உற்பத்தி பிஎம்ஐ கணக்கெடுப்பைப் பற்றி கீழ்கண்டவாறு விமர்சனம் செய்துள்ளார்.

"ஜூன் மாதத்தின் போது உற்பத்தி செயல்பாடு பொதுவாக சமநிலையிலேயே இருந்துள்ளது. மின் பற்றாக்குறை கடந்த மாதத்தைக் காட்டிலும் குறைவாகவே இருந்தாலும், உற்பத்தி தொடர்ந்து குறைந்திருக்கிறது. மேலும், வலுவற்ற உள்ளூர் கிராக்கியினால் புதிய ஆர்டர்களும் குறைந்துள்ளன. அதே சமயம், வேலை வாய்ப்பு வலுப்பெற்றுள்ளதுடன், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் இருப்பும் அதிகரித்துள்ளது. வளர்ச்சியின் வேகம் மிதமாக இருப்பினும், அவுட்புட் விலைகள் சற்றே எழுச்சியடைந்தும், இன்புட் விலைகள் நன்றாகவே அதிகரித்தும் காணப்படுகின்றன. ரூபாய் மதிப்பில் ஏற்பட்டிருக்கும் இறக்கமே இதற்கான காரணங்களுள் முக்கியமானதாகும்."

கடினமான பொருளாதார நிலை மற்றும் தொடரும் மின்வெட்டுக்களுக்கு இடையில், தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஜூன் மாதத்தில் குறைந்த உற்பத்தி அளவுகள் பதிவாகியுள்ளன. அதாவது, இந்த இறுக்கத்தின் ஒட்டுமொத்த வேகம் மே மாதம் முதல் மட்டுப்பட்டுள்ளது. நுகர்வோர் பொருட்களின் உற்பத்தியாளர்களின் சரிவினால், தொடர்ந்து கண்காணிக்கப்படும் மூன்று சப்-செக்டார்களிலும் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+