செக் வைத்த செபி: மியூச்சுவல் ஃபண்ட்!!

செக் வைத்த செபி: மியூச்சுவல் ஃபண்ட்!!
சமீபகாலமாக, மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு எதிரான குரல்கள் மிகப் பலமாக ஒலித்த வண்ணம் உள்ளது. தவறான வாக்குறுதியை நம்பி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள், அவர்களுடைய புகார்களை எங்கு தெரிவிக்க வேண்டும் என்பதைக் கூட தெரியாதவர்களாக இருக்கின்றனர். மியூச்சுவல் ஃபண்ட் அலுவலர்கள் பொய்யான வாக்கு உறுதிகளை கொடுத்து தங்களுடைய நிதிப் பொருட்களை முதலீட்டாளர்களிடம் விற்பனை செய்யும் பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது.

( Top 5 mutual fund schemes with solid returns)

சில விற்பனை பிரதிநிதிகள் தங்களுடைய நிறுவனத்தின் விற்பனையை அதிகரித்து இலக்கை அடைவதற்காக தவறான வழிமுறைகளைப் பின்பற்றி முதலீட்டாளர்களை ஏமாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில நேரங்களில், விற்பனைப் பிரதிநிதிக்கே அந்த பொருட்களைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாத நிலையில் அந்த நிதிப் பொருட்களை முதலீட்டாளர்களின் தலையில் கட்டி விடுகின்றனர்.

நெறிமுறையாளர்களின் செயல்பாடு

அதிகரித்து வரும் முரண்பாடுகள் மற்றும் வெளிப்படையற்ற தன்மை போன்றவை நெறிமுறையாளர்களை கடுமையான மற்றும் கட்டாய நடவடிக்கைகளை மேற்கொள்ள தூண்டுகிறது. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஊழியர்களை அடையாளம் கண்டு கொள்ள உதவும் செயல்முறையை அமுல்படுத்த இந்தியா மியூச்சுவல்ஃபண்டுகளிலன் சங்கத்தை (AMFI) கேட்டு கொண்டுள்ளது.

அடையாள எண் (EUIN)

இந்த குறித்து AMFIயும் பரஸ்பர நிதி சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளை, பரஸ்பரநிதி விற்பனையில் ஈடுபடும் ஊழியர்களின் பெயர் மற்றும் அடையாள எண்கள் உட்பட அடிப்படைத் தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது பணியாளரின் தனித்த அடையாள எண் (EUIN) என அழைக்கப்படுகிறது.

தற்பொழுது உள்ள நடைமுறையில் முதலீட்டாளர் அளிக்கும் புகாரில் தவறான பரஸ்பர நிதிப் பொருட்களை விற்பனை செய்த ஊழியரை கண்டறிவது மிகக் கடினமாகும். சில நேரங்களில் அந்த ஊழியர் அவர் பணிபுரியும் நிறுவனத்தை விட்டு விலகி வேறு சில நிறுவனங்களில் பணிக்குச் சேரலாம் அல்லது அதே நிறுவனத்தின் வேறு சில கிளைக்கு மாற்றம் செய்யப்படலாம்.

இந்த அமைப்பு எவ்வாறு வேலை செய்யும்?

இது உண்மையில் ஒரு ஊழியருக்கு நிதிப் பொருட்களை விற்பனை செய்யும் பணியை கொடுக்கும் முன்னால் அந்த ஊழியருக்கு முறையான பயிற்சி மற்றும் அங்கீகாரத்தை கொடுக்க இருக்கிறது. பரஸ்பர நிதி பொருட்களை விற்பனை செய்யும் அல்லது அந்த துறையில் ஈடுபட திட்டமிடும் எவரும் தேசிய பத்திர சந்தை நிறுவனம் (NISM) நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறும் நபர்களுக்கு ஒரு புதிய EUIN கிடைக்கும். அதன் பிறகு அவர்கள் AMFI இல் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் 1 ஜூன் 2013 ஆகும்.

நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பதற்கு முன்னர் ஊழியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை விற்பனை தொழில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் விபரங்களைப் பற்றிய ஒரு தரவுத்தளத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு ஊழியர் விற்பனை செய்த பொருட்கள் மற்றும் அவருடைய பரிந்துரைகளை கண்காணிக்கும். இந்த நடைமுறை அமலுக்கு வருவதற்கு முன்னர், பரஸ்பர நிதிகளை விற்கும் நிறுவனங்களின் ஊழியருக்கான தகுதி, பயிற்சி மற்றும் AMFI கீழ் பதிவு போன்ற எந்த ஒரு முறையான நடவடிக்கைகளும் இல்லாமல் விற்பனையில் ஈடுபட்டு வந்தன. ஆனால் புதிய கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் அனைத்து நிர்வாகிகளும் ஒரே கூரையின் கீழ் வருவார்கள்.

சுய கட்டுப்பாடு

ஒழுங்குமுறை மற்றும் மதிப்பீட்டு, நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனையாளரின் மதிப்பெண் இப்போது ஒரு வழக்கமான அடிப்படையில் நெறிமுறையாளர் மூலம் மதிப்பிடப்படுகிறது. மறுபுறம் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சரியான தகவல்களை கொடுத்து வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் தங்களுடைய உத்திகளை பின்பற்றும்.

செபி மற்றும் AMFI இன் இந்த நடவடிக்கைகள் பரஸ்பர நிதி துறையில் உள்ள அனைத்தும் மர்மமான விற்பனை அல்ல என்று அறிவுறுத்துகிறது. மேலும் இதன்மூலம் பாதிக்கப்படுபவர்கள் முதலீட்டாளர்கள் மட்டுமே. இந்த விதிகளுக்குப் பின்னர், தவறான முறையில் விற்பனை செய்யும் விற்பனை ஊழியர்களின் அறிக்கையில் பாதிக்கப்படும். மேலும் புகார்கள் அதிகமாகிவிட்டால் அத்தகைய விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+