வட்டி விகிதங்களை குறைக்க பொதுத்துறை வங்கிகளுக்கு சிதம்பரம் கோரிக்கை

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வட்டி விகிதங்களை குறைக்க பொதுத்துறை வங்கிகளுக்கு சிதம்பரம் கோரிக்கை
சென்னை: "ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பின் பலன்களை நுகர்வோருக்கு வழங்க இந்திய வங்கிகள் மறுக்கிறது, இந்தத் தருணத்தில் இந்திய நிதியமைச்சர் சிதம்பரம் கடந்த புதனன்று வங்கிகள் தங்களுடைய அடிப்படை வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அவர் மேலும் , குறைக்கப்பட்ட வட்டி விகிதம் என்பது நுகர்வோரின் கடன் சுமையை கணிசமாகக் குறைக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 2012 ல் இருந்து குறுகிய கால கடன் விகிதத்தை (repo)1.25 சதவிகித புள்ளிகளாக குறைந்துள்ளது, ஆனால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு சுமார் 0.30 சதவீத பலன்களை மட்டுமே கொடுத்துள்ளன.

"நாங்கள் அவர்களின் (பொதுத்துறை வங்கிகள்) அடிப்படை விகிதத்தை பாருங்கள் எனக் கூறினோம். எனக்கு வங்கியாளர்கள் மீது அபிமானம் உண்டு , இந்திய ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை 125 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ள இந்த தருணத்தில். அதனுடைய சில நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படவேண்டும்" , என பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடைய கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் சிதம்பரம் கூறினார்.

மேலும் அவர் "அனைத்து வங்கிகளும் இந்த மாதத்தில் தமது அடிப்படை விகிதத்தை மறுபரிசீலனை செய்யும். அதன் பிறகு அவர்கள் அடிப்படை விகிதத்தை குறைப்பது பற்றி தகுந்த முடிவை எடுப்பார்கள்", என்று உறுதியளித்தார்.

"என் பார்வையில், அடிப்படை வட்டி விகிதம் குறைப்பு என்பது இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய காரணியாகும், மேலும் இது கடன் வளர்ச்சியை ஊக்குவிக்கும்" என நிதி அமைச்சர் கூறினார்.

அதேசமயம் வங்கியாளர்களுக்கு சிதம்பரத்தின் கோரிக்கை பெரிய தாக்கத்தை ஒன்றும் ஏற்படுத்தப் போவதில்லை. பாரத ஸ்டேட் வங்கி, அடிப்படை வட்டி விகிதத்தை சிறிதளவு மட்டுமே குறைக்கும் சாத்தியம் உள்ளது எனத் தெரிவித்து விட்டது. அந்த வங்கி மேலும் தெரிவிக்கையில் சந்தையில் தமது வங்கியின் வட்டி விகிதமே மிகவும் குறைவானது எனத் தெரிவித்துள்ளது.

வங்கியாளர்கள், அதிகரித்து வரும் நெறிமுறைகள், வட்டி விகிதம் மற்றும் 0.5 சதவீதம் வரை அதிகரித்துள்ள சொந்த கடன் செலவு ஆகியவற்றால், இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பின் நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதில் கடும் நெருக்கடிக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.

பாரத ஸ்டேட் வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 9.7 சதவீதமாக உள்ளது. இது மற்ற பொதுத்துறை வங்கிகள் சராசரி வட்டி விகிதமான 10.2 சதவீதத்துடன் ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவு எனசிதம்பரம் கூறினார்.

இதற்கிடையில், இந்தியன் வங்கி ஜூலை 8 முதல் தன்னுடைய அடிப்படை வட்டி விகிதத்தை 10.25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

சிதம்பரம் மேலும் அனைத்து வங்கிகளும் தங்களுடைய செயல்படாத முதல் 30 கணக்குகளில் கவனம் செலுத்தி, தகுதியிருந்தும் கடனை திரும்பச் செலுத்தாதவர்களுக்கு எதிரான மீட்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

"அவர்கள் ஒவ்வொரு வங்கிகளிலும் உள்ள முதல் 30 எண்பிஏ (NPA) கணக்குகள் மீது ஒரு நெருக்கமான கண் வைத்து இருக்கிறார்கள், மேலும் தகுதியிருந்தும் கடனை திரும்பிச் செலுத்த மறுக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கடனை திரும்பி வசூலிக்கும் நடவடிக்கையை தீவிரப் படுத்த இருக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.

சிதம்பரம் வங்கிகள் தங்களுடைய முதல் 30 செயல்படாத கணக்குகள் மற்றும் செயல்படும் கணக்குகளை மாதந்தோறும் பரிசீலனை செய்யும்படி அறிவுறுத்தப்ப்ட்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

"ஒவ்வொரு மாதமும் வங்கிகள் தங்களுடைய எண்பிஏ (NPA)கணக்குகளை பரிசீலித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகள் வங்கிகளின் இருப்புநிலையை மேம்படுத்த உதவும்", என்று கூறினார்.

வங்கிகளின் சொத்து தரம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலண்டில் அதற்கு முந்தைய மாதங்களை ஒப்பிடும் பொழுது அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

"ஒட்டு மொத்த எண்பிஏ (NPA) விகிதமும் நன்றாக முன்னேறியுள்ளது. ஒட்டு மொத்த எண்பிஏ (NPA) அடிப்படையில் ஒவ்வொரு துறைகளும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே டிசம்பர் 2012 உடன் ஒப்பிடுகையில் மார்ச் 2013 காலாண்டில் சொத்து தரம் உண்மையில், மேம்பட்டுள்ளது. ஆனால் ஒரு காலாண்டை வைத்து நாம் எதுவும் கணிக்க முடியாது. நாம் ஒரு நிதியாண்டு முழுவதும் பொருத்திருந்து பார்க்க வேண்டும்", என நிதி அமைச்சர் கூறினார்.

அவர் மேலும், "வைப்புத்தொகை வளர்ச்சி மார்ச் 2013 வுடன் முடிவடைந்த காலாண்டில் மிக மந்தமாக உள்ள பொழுது எவ்வாறு நாம் அதிக கடன் வளர்ச்சி விகிதத்தை எதிர்பார்க்க முடியும்", எனத் தெரிவித்தார்.

மார்ச் 31, 2013 இறுதியில், பொதுத்துறை வங்கிகளின் வைப்பு நிதி வளர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்து 14.91 சதவீதமாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 14.4 சதவீதமாக இருந்தது. மார்ச் 31 இறுதியில் கடன் வளர்ச்சி விகிதம் 15.62 சதவீதமாக குறைந்து விட்டது. கடந்த நிதி ஆண்டின் இதே பருவத்தில் இது சுமார் 17.76 சதவீதமாக இருந்தது.

"ஒரு சில துறைகளான விவசாயம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சில்லறை கடன்கள் போன்றவற்றிற்கு கடன் அதிகம் தேவைப்படுகிறது", என்று அவர் கூறினார்.

வீட்டு வசதித் துறையில் கடன்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக குடியிருப்பு நோக்கங்களுக்கான வர்த்தக ரியல் எஸ்டேட் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. உள்கட்டமைப்பு துறைகளான, சாலை துறை, மரபு சாரா எரிசக்தி துறையில் அதிக கடன் தேவைக்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன.

அவர் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் இணக்கமான பெசெல் மூலதன தேவைக்கான விதிமுறைகளை பின்பற்றுகின்றன. அவர் நான்கு பொதுத்துறை வங்கிகளான ஐ.டி.பி. ஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மகாராஷ்டிரா வங்கி மற்றும் தேனா வங்கி தவிர மற்ற அனைத்து வங்கிகளும் சுமார் 8 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட போதிய மூலதனம் விகிதத்தை (CAR) கொண்டுள்ளன என்று கூறினார்.

பொது துறை வங்கிகள் இந்த ஆண்டு 8,000 புதிய கிளைகளை துவக்கவும், 50,000 ஊழியர்களை பணிக்கு அமர்த்தவுள்ளதாக திரு சிதம்பரம் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: bank வங்கிகள்
English summary

Chidambaram urges PSU banks to cut lending rates

With banks shying away from passing on RBI rate cut benefits, Finance Minister P Chidambaram Wednesday asked them to review their minimum lending rates or base rates so as to bring the cost of borrowing down for consumers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X