இந்திய சேவைத் துறையில் வலுவற்ற வளர்ச்சி: எச்எஸ்பிசி

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய சேவைத் துறையில் வலுவற்ற வளர்ச்சி: எச்எஸ்பிசி
இந்திய சர்வீஸஸ் துறை (Services sector), ஜூன் மாதத்தில் மிதமான வேகத்திலேயே விரிவடைந்துள்ளதாக எச்எஸ்பிசி இந்தியா சர்வீஸஸ் பிஎம்ஐ காட்டியுள்ளது.

"இந்திய தனியார் துறைகளின் வணிக செயல்பாடு, தொடர்ந்து ஐம்பதாவது மாதமாக ஜூன் மாதத்திலும் உயர்ந்துள்ளது. எனினும், சர்வீஸஸ் நிறுவனங்கள் உற்பத்தி அளவில் வலுவற்ற வளர்ச்சியையும், உற்பத்தியாளர்கள் தொடர்ந்து இரண்டாவது மாதமாக வீழ்ச்சியையும் பதிவு செய்திருக்கும் இவ்வேளையில், எச்எஸ்பிசி இந்தியா காம்போஸிட் அவுட்புட் இன்டெக்ஸ், மே மாதத்தின் போது, 52.0லிருந்து 50.9 வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இது சிறிதளவிலேயே காணப்படும் விரிவாக்க விகிதத்துடன் ஒத்துப்போகிறது. வலுவற்ற தன்மையைப் பொறுத்தவரை, இந்த விகிதமானது, கடந்த ஒன்றரை வருடங்களாக இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது." என்று எச்எஸ்பிசி பிஎம்ஐ குறிப்பிட்டுள்ளது.

காலத்துக்குத் தக்கவாறு மாறிக்கொள்ளும் எச்எஸ்பிசி சர்வீஸஸ் பிசினஸ் ஆக்டிவிடி இன்டெக்ஸ், மே மாதத்தின் போது இருந்த மூன்று-மாத கால அதிக அளவீடான (53.6) -லிருந்து 51.7 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது, ஜூன் மாதத்தின் போது இந்தியாவெங்கிலும் இருந்து வந்த மிதமான செயல்திறன் எழுச்சியையே காட்டுகிறது. நியூயார்க்கின் குறைந்த லாபம் மற்றும் அடக்குமுறைக்கு உட்பட்ட பொருளாதார நிலை ஆகியவையே உற்பத்தி நலிவிற்கான காரணங்கள். தொடர் கண்காணிப்பிற்கு உட்பட்ட ஆறு பிரிவுகளுள் மூன்று பிரிவுகளில் வணிக செயல்பாடு விரிவடைந்துள்ளதாக துறை சார்ந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. மிக அதிகமான உயர்வு "இதர சேவைகள்" என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எச்எஸ்பிசியில், இந்தியா மற்றும் ஏசியான் ஆகியவற்றுக்கான தலைமை பொருளாதார நிபுணராக பதவி வகிக்கும் லெய்ஃப் எஸ்கெஸன், இந்தியா சர்வீஸஸ் பிஎம்ஐ சர்வேயைப் பற்றி அவர் "புதிய வணிகங்களின் போக்குகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அடுத்த ஓராண்டின் வர்த்தகத்தைப் பற்றிய நம்பிக்கையை குலைத்துள்ளதால், சர்வீஸ் துறை செயல்பாடு மிதமான வேகத்திலேயே வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வேகத்தடையை எதிர்கொள்ள இயலாமல், அதிகரிக்கப்பட்ட தொழிலாளர் ஊதியம் மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றோடு ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, பணவீக்கம் நன்கு காலூன்றி விட்டது." என்று விமர்சித்தார்.

சர்வீஸ் புரொவைடர்கள் அடுத்த ஓராண்டில் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Services sector sees weak growth: HSBC PMI

The Services sector in India continued to expand at a slow pace in the month of June, HSBC India Services PMI shows.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X