சீனாவை முந்தியது இந்தியா!!!: எச்எஸ்பிசி

கடந்த ஜூன் மாதத்தில், பொருளாதாரச் சந்தையை விரிவுபடுத்தியதில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மிக வேகமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்று எச்எஸ்பிசி புள்ளி விவரம் தெரிவித்திருக்கிறது.

2008/09 உலகப் பொருளாதார பெருமந்தத்தத்தைவிட கடந்த மாதம் மிகப் பெரிய பொருளாதார மந்தம் ஏற்பட்ட போது இந்திய தனது சந்தையை மிக வேகமாக விரிவுபடுத்தி இருக்கிறது என்று அந்த புள்ளி விவரம் தெரிவித்திருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் வெளிவரும் பிஎம்ஐ என்ற சர்வே கூறும் போது கடந்த மாதத்தில் 51.3 புள்ளிகளில் இருந்த எச்எஸ்பிசி எமெர்ஜிங் மார்க்கெட்ஸ் இன்டக்ஸ் (இஎம்ஐ), 50.6 புள்ளி அளவிற்கு சரிந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. இது 2009 மே மாதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய வீழ்ச்சி என்று அந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது.

சீனாவை முந்தியது இந்தியா!!!: எச்எஸ்பிசி

கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத இந்த கடும் வீழ்ச்சிக்கு, ஆசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சீனாவின் உற்பத்தித் துறையில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய சரிவே காரணம் என்று எச்எஸ்பிசி தெரிவித்திருக்கிறது.

வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் சீனா, 2012 ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் மிகப் பெரிய பின்னடைவையும், தேகக்க நிலையையும் சந்தித்திருக்கிறது. அதே நேரத்தில் ரஷ்யாவும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் வளர்ச்சியை சந்தித்திருக்கின்றன.

கடந்த ஜூன் மாதம் உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் இந்தியாவினுடைய எச்எஸ்பிசி காம்போசிட் புள்ளி 50.9ஆக இருந்தது. ஆனால் சீனாவின் எச்எஸ்பிசி காம்போசிட் புள்ளி 49.8 மட்டுமே. அதே நேரத்தில் பிரேசில் 51.1 புள்ளியையும் மற்றும் ரஷ்யா 50.1 புள்ளியையும் பெற்றிருக்கின்றன.

ஒரு நாடு எச்எஸ்பிசியின் காம்போசிட் புள்ளியை 50க்கு அதிகமாக பெற்றிருந்தால், அந்த நாடு தனது சந்தையை விரிவுபடுத்தி இருக்கிறது என்று பொருள்.

இது சம்பந்தமாக எச்எஸ்பிசியின் இணை இயக்குனரும் ஆசிய பொருளாதார ஆய்வாளருமான ஃப்டரிக் நியூமன் கூறும் போது, மாறிவரும் பொருளாதார சந்தையில் ஏசியாவிற்கு ஒரு பதட்டம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் உற்பத்தி துறையில் வேகம் குறைந்துவிட்டதால், பொருளாதார வளர்ச்சி நிலையானதாக இல்லாமல் மேடு பள்ளமுமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

உற்பத்தித் துறையில் சரிவு ஏற்பட்டிருப்பதால், உலக அளவில் வளர்ந்து வரும் சந்தைகளில், புதிய வர்த்தகங்களின் அளவில், மிகச் சிறிய மாற்றம் கடந்த மாதத்தில் ஏற்பட்டிருக்கிறது. மேலும் வளர்ந்து வரும் சந்தைகளில் ஏற்பட்டிருக்கும் புதிய வேலை வாய்ப்புகளும் சற்று குறைவாகவே கடந்த மாதத்தில் இருந்தன.

மேலும் 12 மாதங்களுக்கும் உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கும் என்று எச்எஸ்பிசி தெரிவித்திருக்கிறது.

எனினும் நீண்ட காலத்திற்கான வளரும் சந்தைகள் ஆறுதலாகவும் அதே நேரத்தில் உற்சாகம் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றன என்று எச்எஸ்பிசி தெரிவித்திருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+