
மே மாதத்திற்கு முன்பு பரஸ்பர நிதித் திட்டங்களில் திரட்டப்பட்ட பணத்தின் அளவு ரூ.1.06 லட்சம் கோடியாகும்.கடந்த மே மாதம் மட்டும் பரஸ்பர நிதித் திட்டங்கள் மூலம் ரூ.37,435 கோடி திரட்டப்பட்டிருக்கிறது என்று சந்தையை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபி தெரிவித்திருக்கிறது.
2011 ஏப்ரல் மாதத்திற்கு பின்பு இந்த ஏப்ரல் மாதம் தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிகமான பணத்தை முதலீடு செய்திருக்கின்றனர். அதாவது ரூ.1.84 லட்சம் கோடியை முதலீடு செய்திருக்கின்றனர்.
இதன் மூலம் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம் ரூ.1.44 லட்சம் கோடி பணம் திரட்டப்பட்டிருக்கிறது.
கடந்த மே மாதம் மட்டும் மொத்தமாக ரூ.7.03 லட்சம் கோடி பணம் பரஸ்பர நிதித்திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டது. அதே நேரத்தில் ரூ.6.65 லட்சம் கோடி பணம் திரும்பப் பெறப்பட்டது. அதனால் மே மாதம் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட மீதி இருக்கும் பணத்தின் அளவு ரூ.37,435 கோடி ஆகும்.
தி ஃபண்ட் மொபைலைசேசனும், மே மாதம் 31 வரை ரூ.8.68 லட்சம் கோடி பணத்தை திரட்ட உதவி செய்திருக்கிறது.பிஎஸ்இ'எஸ் பென்ச் மார்க் சென்செக்ஸ் கடந்த மே மாதம் 256 புள்ளிகளை அதாவது 1.31 சதவீதத்தை வழங்கி இருக்கிறது.
2013-2014 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் மியூச்சுவல் ஃபண்ட் அமைப்புகள் ரூ.1,44,009 கோடி நிதியை திரட்டி இருக்கின்றன. இது கடந்த 2012-2013 நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் திரட்டப்பட்ட ரூ.1,19,487 கோடியைவிட அதிகமாகும் என்று செபி குறிப்பிட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications