அமெரிக்காவில் சொத்துக்களை வாங்குவதில் இந்தியர்கள் படு தீவிரம்!!!

2013 மார்ச் இறுதி வரை 3.5 மில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவில் சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் அதாவது அமெரிக்க ரியல் எஸ்டேட் துறையில் அதிகமாக சொத்துக்களை வாங்கியதில் முதல் ஐந்து இடங்களில் இந்தியர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்று நேசனல் அசோசியேசன் ஆஃப் ரியலேட்டர்ஸ் தெரிவித்திருக்கிறது.

கனடா, சீனா, மெக்சிகோ, இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகள் 68.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு 53 சதவீத உலகளாவிய சொத்துக்கள் வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன என்று அந்த அசோசியேசன் தெரிவித்திருக்கிறது.

அமெரிக்காவில் சொத்துக்களை வாங்குவதில் இந்தியர்கள் படு தீவிரம்!!!

வரலாற்று ரீதியாக இந்த ஐந்து நாடுகளும் 68 நாடுகளில் மிகப் பெரிய அளவில் சொத்துக்களை வாங்கிக் குவித்து வந்திருக்கின்றன. தற்போது கனடா 23 சதவீதமும், சீனா 12 சதவீதமும் வாங்கி வைத்து முன்னனியில் இருக்கின்றன. அதற்கடுத்தாற் போல மெக்சிகோ 8 சதவீதமும், இந்தியா 5 சதவீதமும் மற்றும் இங்கிலாந்து 5 சதவீதமும் வாங்கி இருக்கின்றன என்று அந்த அசோசியேசன் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள உலகளாவிய வீட்டு விற்பனை மந்தமாக இந்தது. ஆனால் தற்போது அந்த விற்பனை அதிகரித்திருக்கிறது என்று அந்த அசோசியேசன் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் சொத்துக்களை வாங்கும் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதாக
"தீ 2013 ப்ரோஃபைல் ஆஃப் இன்டர்நேசனல் ஹோம் பையிங் ஆக்டிவிட்டி" தெரிவித்திருக்கிறது. அதனால் உலகளாவிய அளவில் சொத்துக்களை வாங்குபவர்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஒரு முக்கியமான இடமாக இருந்து வருகிறது என்று அது தெரிவிக்கிறது.

அசோசியேசன் ஆஃப் ரியலேட்டர்ஸ் என்ற அமைப்பு, உலகளாவிய வர்த்தகத்தில் ஈடுபடும் அமெரிக்க ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்களிடம், 2013 மார்ச் மாதம் இறுதியிலிருந்து அதற்கு முந்தைய 12 மாதங்களுக்கான விற்பனை அறிக்கையை கேட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி அமெரிக்காவில் நடந்த உலகளாவிய மொத்த விற்பனை 68.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. மேலும் கடந்த வருடத்தைவிட 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவு விற்பனை குறைந்திருக்கிறது என்பதையும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

அமெரிக்காவில் நடந்த உலகளாவிய மொத்த சொத்துக்கள் விற்பனையில் 34.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அதாவது 51 சதவீத சொத்துக்களை, அமெரிக்க குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்கள் வாங்கியிருக்கின்றனர். மற்றும் 33.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அதாவது 49 சதவீத சொத்துக்களை அமெரிக்காவிற்கு புதிதாக குடியேறி இருக்கும் அல்லது ஆறு மாதத்திற்கு அதிகமாக அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டவர்களால் வாங்கப்பட்டிருக்கிறது.

சொத்துக்களை வாங்கும் வெளிநாட்டவர்கள், வெளிநாடுகளில் மட்டும் அல்ல, மாறாக அமெரிக்காவில் சொத்துக்களை வாங்குவதிலும் பல தடைகளை சந்தித்து வருவதாக கலிஃபோர்னியாவில் இருக்கும் எவர் க்ரீன் ரியாலிட்டி வில்லா பார்க்கின் உரிமையாளரும், என்எஆர் அமைப்பின் தலைவருமான கேரி தாமஸ் தெரிவித்திருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+