ரூபாயின் மதிப்பு விரைவில் எழுச்சியடையும்: பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூபாயின் மதிப்பு விரைவில் எழுச்சியடையும்: பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை!!
அமெரிக்கப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பங்குகள் வாங்கும் செயல்திட்டத்தைக் குறைக்கப்போவதாக வெளியாகியுள்ள யு.எஸ். ஃபெடரல் ரிசர்வின் அறிக்கைக்கான எதிர்வினைகளே, ரூபாய் மதிப்பின் வரலாறு காணாத தொய்வு மற்றும் ஈக்விட்டி சந்தையின் அதல பாதாள வீழ்ச்சி ஆகியவை என்று பொருளாதார நிபுணர்கள் இன்று கூறியுள்ளனர்.

உலகின் மிகப்பெரும் பொருளாதாரமான அமெரிக்கப் பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டால், அது இந்திய ஏற்றுமதிகளையும் உயர்த்தும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, யு.எஸ். டாலருக்கு எதிராக சுமார் 60 புள்ளிகள் வரை எட்டியுள்ள ரூபாயின் மதிப்பும் இந்நிலையிலிருந்து மீண்டு வரும் சாத்தியம் உள்ளதாகக் கூறியுள்ளனர்.

 

"ஸ்டிமுலஸ் பிரொக்ராம் கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் பெறப்படும் என்ற ஃபெட் சேர்மன் பென் பெர்னான்கேயின் அறிவிப்புக்கான உணர்ச்சிகர எதிர்வினையே இது என்றே நான் நினைக்கிறேன். ஆனால், யு.எஸ். பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த மேம்பாடு நம் ஏற்றுமதிகளின் வளர்ச்சிக்கு நன்மையளிக்கக் கூடியதே." என்று கிரிஸிலின் தலைமை பொருளாதார நிபுணரான தர்மக்ரிதி ஜோஷி, பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்கப் பொருளாதாரத்தில் காணப்படும் மீட்சியின் காரணமாக, இவ்வருடத்தின் இறுதிக்குள், மாதத்திற்கு சுமார் 85 மில்லியன் யு.எஸ். டாலர் செலவு பிடிக்கக் கூடியதான, குவான்டிட்டேட்டிவ் ஈஸிங் என்று பிரபலமாக அறியப்படும், பங்குகள் வாங்கும் செயல்திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்படுத்தப் போவதாக பெர்னான்கே நேற்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஆசிய சந்தைகளை ஆட்டம் காணச் செய்து, சுமார் 2 சதவீத இழப்புக்கு வித்திட்டுள்ளது. ஆனால், சென்செக்ஸ் 2.8 சதவீதம் வரை உருண்டு புரண்டு, சுமார் 526 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 18,719 புள்ளிகளை எட்டியுள்ளது.

"ரூபாயின் நிலைமையை கூடிய சீக்கிரம் திருத்தியமைப்போம். ரூபாயின் மதிப்பு அதன் தற்போதைய நிலையிலிருந்து கட்டாயம் எழுச்சியடையும் என்று நினைக்கிறோம்." என்று கூறினார் ஜோஷி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Re plunge knee-jerk reaction, recovery on way: Economists

The rupee's plunging to record level and a sharp fall in the equity market are knee-jerk investor reactions to the US Federal Reserve's saying the it will slow down bond-buying programme in view of improving American economy, economists said today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X