
( 7 takeaways from the Infosys Q1 2014 results )
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இன்போசிஸ் வரியை கழித்த பிறகும் ரூ.2,394 கோடி லாபத்தைப் பெற்றிருந்தது. ஆனால் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் கடந்த ஆண்டின் லாபத்தை விட குறைவாக அதாவது வரியைக் கழித்த பிறகு ரூ.2374 கோடி லாபத்தைத்தான் பெற்றிருக்கிறது.
இன்ஃபோசிஸ் ரூ.2300 கோடி அளவுக்கு லாபத்தையே பெறும் என்று பொருளாதார வல்லுனர்கள் முதலில் கணித்திருந்தனர். ஆனால் அவர்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை வீழ்த்தி இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் அதிக லாபத்தைப் பெற்றிருக்கிறது.
அதுபோல் அமெரிக்க டாலர்களின் வருமானத்தைப் பொருத்தவரை, இன்ஃபோசிஸ் 1991 மில்லின் அமெரிக்க டாலர்களை வருமானமாக பெற்றிருக்கிறது. இந்த டாலர் வருமானமும் பலரும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகும். மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் வேளையில், அந்த நிறுவனம் 11,267 கோடி இந்திய ரூபாயை வருமானமாக பெற்றிருக்கிறது.
2014 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், 23.64 சதவீத இபிஐடி லாபத்தை இன்ஃபோசிஸ் ஈட்டியிருக்கிறது.
இது சம்பந்தமாக அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் கூறும் போது, எங்களுடைய உற்பத்திப் பொருள்களுக்கான தகுந்த மற்றும் சிறந்த தளங்களை நாங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்தியாவில் உள்ள 9 நிறுவனங்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் பென்பொருள் கருவிகளை ஏற்றுக் கொண்டிருக்கின்றன என்று அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
க்ளவ்ட் மற்றும் பிக் டேட்டா தொழில் நுட்பங்கள் தற்போது தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதால், அந்த தொழில் நுட்பங்களில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இந்த தொழில் நுட்பங்களில் நாங்கள் 100 வர்த்தக நடவடிக்கைகளை முடித்திருக்கிறோம்.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 15 க்ளவுட் மற்றும் பிக்டேட்டா தொழில் நுட்ப வர்த்தகத்தை முடித்திருக்கிறோம். உலகளாவிய ஓப்பன் டேட்டா சென்டர் அலையன்ஸ் (ODCA) என்ற அமைப்பில் சேர்ந்து கொள்ள, இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு அழைப்பு வந்தது என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
2014 ஆம் முதல் நிதயாண்டில் இன்ஃபோசிஸ் 66 புதிய வாடிக்கையாளர்களை பெற்றது. தற்போது, வல்லுனர்கள், இன்ஃபோசிஸ் நிறுவனத்திடமிருந்து அதிகம் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அந்த நிறுவனம் தனது வளர்ச்சியில் உறுதியாக இருக்குமா என்பது வரும் காலாண்டுகளில்தான் தெரியும்.


Click it and Unblock the Notifications