
தற்போது ஒரு சில பொதுத்துறை நிறுவனங்களிடம் உபரியாக இருக்கும் பணத்தின் மதிப்பு ரூ.2.8 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. உபரி பணத்தை பொதுத்துறை நிறுவனங்கள் வங்கிகளில் முடக்கி வைக்க முடியாது. எனவே இந்த பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏதாவது துறையில் முதலீடு செய்ய வேண்டும் அல்லது முதலீடு செய்வதற்காக மற்றவரிடம் கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
உபரியாக இருக்கும் பணத்தை பயனுள்ள முறையில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை வகுத்து வருகிறது. இதன் மூலம் முதலீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் இந்த புதிய விதிமுறைகள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது, "தற்போது பலவிதமான கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எப்போது முழுமையான விதிமுறைகள் வரும் என்று தெரியாது" என்று சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
பொதுத்துறைகளில் உபரியாக இருக்கும் பணத்தை பயனுள்ள முறையில் முதலீடு செய்வதற்கான விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசு கடந்த ஆண்டு, டிப்பார்ட்மென்ட் ஆஃப் பப்ளிக் என்டர்பிரைசஸ் (டிபிஇ) என்ற ஒரு குழுவை, டிப்பார்ட்மென்ட் ஆஃப் இக்கனாமிக் அஃபயர்ஸின் துணை செயலாரான சக்திகாந்தா தாஸ் என்பவரின் தலைமையில் ஏற்படுத்தியது.
அந்தக் குழு விதிமுறைகளை உருவாக்கி அதன் அறிக்கையை சமீபத்தில் நிதித்துறையிடம் சமர்ப்பித்திருக்கிறது. பொதுத்துறைகளில் உபரியாக இருக்கும் பணத்தை பல்வேறு துறைகளில் குறிப்பாக பரஸ்பர நிதிகள், குறிப்பிட்ட கால நிதிகள், ட்ரஷரி பில்கள் மற்றும் அரசு பாதுகாப்பு பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம் என்று அந்த குழு பரிந்துரை செய்திருக்கிறது.
உபரியாக இருக்கும் பணத்தை ஏதாவது ஒரு துறையில் முதலீடு செய்ய வேண்டும் அல்லது அதிகமான டிவிடண்ட் தொகை வழங்க வேண்டும் என்று கடந்த மே மாதம் பிரதமரின் அலுவலகம் (பிஎம்ஒ), சென்ட்ரல் பிஎஸ்யுகளுக்கு வலியுறுத்தியிருக்கிறது. அதன் மூலம் இந்த உபரியான பணம், எரி பொருள் வளர்ச்சிக்கும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படும் என்று பிரதமரின் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
உபரி பணத்தை அதிகம் வைத்திருக்கும் பொதுத் துறை நிறுவனங்களான என்டிபிசி, பிஜிசிஐஎல், ஆயில் இந்தியா, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் என்பிசிஐஎல் போன்ற நிறுவனங்கள் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டன.
17 முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களின் உபரி பணத்தை முதலீடு செய்வதற்கான திட்டங்களை கடந்த நிதியாண்டு முதல் பிரதமர் அலுவலகம் கண்காணித்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த உபரி பணத்தை பயன்படுத்த முடியும் என்று பிரதமர் அலுவலகம் நம்புகிறது.
கடந்த 2012-13 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் அளவிற்கு சரிந்தது. ஆனால் இந்த நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1 முதல் 6.7 சதவீதம் வரை வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications