மென்பொருள் உற்பத்தியில் முன்னனியில் இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனம், தனது அதிரடியான செயல்பாடுகளால், அனைவருடைய விமர்சனங்களையும் தவிடு பொடியாக்கி, 2014 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், அதிக வருமானத்தைப் பெற்று கூடுதல் புள்ளிகளைப் பெற்றுள்ளது.
கடந்த காலாண்டை விட இந்த காலாண்டில் குறைந்த லாபத்தை அடைந்தாலும், பல சிக்கல்களுக்கும், விமர்சனங்களுக்கும் நடுவில் இன்ஃபோசிஸ் அடைந்த சாதனைகளைக் கீழே பார்க்கலாம்.
வரி செலுத்திய பிறகும் (பிஎடி) அதிக வருமானம்
பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்ததைவிட, 2014 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், இன்போசிஸ் நிறுவனம் வரியைச் செலுத்திய பிறகும் அதிகமான லாபத்தை பெற்றிருக்கிறது. அதாவது பல வல்லுனர்கள், இன்ஃபோசிஸ் ரு.2,300 கோடி அளவிற்கு லாபத்தைப் பெறும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் அவற்றைத் தவிடு பொடியாக்கி, வரியைக் கழித்த பிறகும், இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ.2,374 கோடி லாபத்தை பெற்றிருக்கிறது.
இபிஐடி லாபமும் அதிகம்
வல்லுனர்களின் கருத்துக்களை பொய்யாக்கும் விதமாக, 2014 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், இன்ஃபோசிஸ் 23.64 சதவீத இபிஐடி லாபத்தைப் பெற்றுள்ளது. இந்த லாப விகிதம் பலரும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகும்.
அமெரிக்க டாலர் வருமானத்தில் மாற்றமில்லை
2014ஆம் நிதியாண்டில் 7-10 சதவீத அமெரிக்க டாலர்களை வருமானமாக பெறவேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிர்வாகம் இலக்கு வைத்திருக்கிறது. தற்போது இந்த இலக்கில் எந்த ஒரு மாற்றத்தையும் இன்ஃபோசி்ஸ் செய்யவில்லை. ஆனால் இந்த இலக்கு மிகவும் குறைவான வளர்ச்சியைக் காட்டுகிறது என்று வல்லுனர்களும் மற்றும் நாஸ்காம் அமைப்பும் தெரிவிக்கின்றனர்.
க்ளவுட் மற்றும் பிக் டேட்டா
க்ளவுட் மற்றும் பிக் டேட்டா தொழில் நுட்பங்கள் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதால், இந்த தொழில் நுட்பங்களில், இன்ஃபோசிஸ் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த தொழில் நுட்பங்களில் ஏறக்குறைய 100 வர்த்தக நடவடிக்கைகளை இன்ஃபோசிஸ் மேற்கொண்டிருக்கிறது.
புதிய வாடிக்கையாளர்களை பெறுவதில் சாதனை
இன்ஃபோசிஸ் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை பிடிப்பதிலும் சாதனை படைத்திருக்கிறது. அதாவது 66 புதிய வாடிக்கையாளர்களை இன்ஃபோசிஸ் பிடித்திருக்கிறது. அதனால் நாங்கள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
சம்பள உயர்வால் லாபம் குறைவு
இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு செய்திருப்பதால், வரும் காலாண்டுகளில் அதன் லாபம் குறையும் என்று எதிர்பார்க்கிறது. அதாவது வரும் காலாண்டுகளில் இந்த சம்பள உயர்வினால் இன்ஃபோசிஸ் நிறுனத்தின் லாபம் 300 புள்ளிகள் அளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூக்கிவிட்ட சந்தை
இன்ஃபோசிஸ் நிறுவனத்தை சந்தைகளும் தூக்கிவிட்டிருக்கின்றன. அதனால் சந்தையில் அந்த நிறுவனம் 13 சதவீத பங்குகளை விற்பனை செய்திருக்கிறது. மேலும் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நோக்கித் தங்கள் பார்வைகளை செலுத்த தொடங்கியிருக்கின்றனர்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications