
அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சிலின் ஆண்டு இறுதி தலைமைத்துவ கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான்கு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றிருக்கும் சிதம்பரம், அமெரிக்க கார்ப்பரேட் துறை தலைவர்களிடம், இந்தியாவில் அவர்களது உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
மேலும் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் பரஸ்பர புரிதல் மூலம் உற்பத்தி துறையில் இந்தியப் பொருளாதாரம் ஒரு பெரிய சக்தியாக உருவாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
மைக்ரோசாப்ட், லாக்ஹீட் மார்ட்டின், போயின் மற்றும் இன்டர்நேஷனல் லீஸ் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் (ஐஎல்எஃப்சி) போன்ற நிறுவனங்களின் தலைவர்கள், சமீபத்தில் அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்திருக்கும் பரிமாற்ற கட்டணம் மற்றும் காம்பரகன்சிவ் இமிகிரேசன் பில் போன்றவற்றினால் ஏற்படும் விளைவுகள் பற்றி தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்.
பரிமாற்றம் கட்டணம் சார்பாக ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க நிறுவனங்கள் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவையாக இருக்கின்றன. பல நிறுவனங்களில் நேரடி அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பது சம்பந்தமாக அரவிந்த மயாராம் கமிட்டி அளித்திருக்கும் பரிந்துரைகளை சிதம்பரம் பரிசீலனை செய்திருக்கிறார். மேலும் அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் வேலை செய்வோருக்கு வழங்கப்படும் விசா சம்பந்தமான அமெரிக்கா வெளியிட்டிருக்கும் காம்ப்ரகன்சிவ் இமிக்ரேசன் ரிஃபார்ம் விதிமுறையில் இருக்கும் முக்கிய சிறப்பம்சங்களை சிதம்பரம் கோடிட்டுக் காட்டினார்.
செனட்டரான பவுக்கஸை சிதம்பரம் சந்தித்து பேசும் போது, இந்தியாவில் தற்போது இருக்கும் வர்த்தக சூழ்நிலையில் பல்வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், இந்திய அரசு வளர்ச்சிக்கான மற்றும் டபுள்யுடிஒக்கான (WTO) கொள்கை வரைவுகளை ஏற்றுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் வர்த்தகம் செய்ய வரும் அன்னிய முதலீட்டாளர்களுக்கு டெல்லி எப்போதும் திறந்து இருக்கும் என்றும், வெளிப்படையாக மற்றும் உண்மையாக இருக்கும் என்றும் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் நடக்க இருக்கும் அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் தலைமைத்துவ கூட்டத்தில் தனது முக்கிய உரையை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க நிதியமைச்சாரன ஜாக் லீயு என்பவரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் கொள்கை வரைவுகளில் அமெரிக்கர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கும் இந்த நிலையில் சிதம்பரம் வாஷிங்டனிற்கு சென்றிருக்கிறார். கடந்த சில வாரங்களாக 250க்கும் மேற்பட்ட அமெரிக்க சட்டவல்லுனர்கள், அமெரிக்க நிறுவனங்களுக்கான இந்திய அரசின் கொள்கை வரைவுகள் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது என்று ஸ்டேட் செகரட்டரியான ஜான் கேரிக்கும், அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமாவிற்கும் தங்கள் கருத்துக்களை எழுதியிருக்கின்றனர்.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications